பக்கம்:எனது நண்பர்கள்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 

பண்டிதமணி
மு. கதிரேசஞ் செட்டியார்

“சைவமும் தமிழும் தழைத்தினிதோங்குக’’ என்பது. தமிழ்ச் சான்றோர் வாக்கு. இக்காலத்தில் இவ்வாறு: கூறுபவர்களைக் காண்பதே அரிதாயிருக்கிறது. அக்காலத்தில் இவ்வாறு கூறுவது மட்டுமல்ல செய்து கொண்டும் இருந்த சான்றோர்களில் பலர் நகரத்தார் சமூகத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் செய்துவந்த, கல்வித் தொண்டும், சமயத் தொண்டும் கணக்கிலடங்காதவை. அத்தகைய சமூகத்தில் பிறந்த பெருமகனே பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார்.

கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் பிறந்த தமிழ்ப் புலவர் பெருமக்களில் காரைக்குடி சொக்கலிங்க ஐயா அவர்களும் ஒருவர். அவர்களின் மாணாக்கர்களில் ஒருவரே பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார் அவர்கள். செட்டியார் நாட்டில் பலவான்குடியில் ரா.ம.கு. ராம. இராமசாமிச் செட்டியார் என்ற சிவநேசச் செல்வம் ஒருவர் இருந்தார் சிவநேசன் என்ற பத்திரிக்கை ஒன்றை நடத்தி சிவநேசர் திருக்கூட்டம் ஒன்றையும் நடத்தி வந்தார். அதன் ஆண்டு விழா ஒன்றில் தலைமை வகித்தவர் கொரடாச்சேரி வாலையானந்த சுவாமிகள். அக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றியவர்கள் மூவர். அந்த மூவரில் இருவர் காரைக்குடி சொக்கலிங்க ஐயாவும் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியாரும் ஆவர். மூன்றாவது ஆள் நான் தான். ஆளுக்கு ஒரு மணி நேரப் பேச்சு.

காரைக்குடி சொக்கலிங்க ஐயாவுக்கு தலைப்பு “மணி வாசகர்”. பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார் அவர்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/58&oldid=986113" இலிருந்து மீள்விக்கப்பட்டது