பக்கம்:எனது நண்பர்கள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விகவநாதம்  67



பசுமலையையும் தங்கள் வாழ்க்கைக்கேற்ற இடங்களாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

உரிமை

தமிழுக்கு உரிமையுடையவர்கள் இம் மூவருமேயாவர். இவர்களின் அனுமதியின்றித் தமிழ் மொழியில் கைவைக்க எவருக்கும் உரிமை இல்லை. அத்தகைய மக்களும் தமிழ் கூறும் நல்லுலகில் இன்றைக்கு இல்லை.

புலமை

திரு. வி. க. ஒரு தமிழ்ப் புலவர். பாரதியார் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிப் புலவர். அடிகளார் ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகிய மும்மொழிப் புலவர்.

வாழ்க்கை

அடிகளார் துறவி பூண்டு வாழ்பவர். பாரதியார் இல்வாழ்விலேயே இருப்பவர். திரு. வி. க. இரண்டிலும் கலந்து வாழ்பவர்.

வெறுப்பு

பாரதியார் வழக்கறிஞராயிருந்தும் அத் தொழிலை வெறுத்தவர். திரு. வி. க. மனைவியார் இறந்ததும் மனை வாழ்வை வெறுத்தவர். அடிகளார் துறவியாயிருந்தும் சந்நியாசத்தை வெறுத்தவர்.

அரசியல்

திரு. வி. க. அரசியலில் என்றைக்கும் தலையிடுபவர். பாரதியார் அரசியலில் தலையிட்டும், இடாமலும் இருப்பவர். அடிகள் அரசியலில் என்றைக்கும் தலையிடாதவர்.

தமிழ்

அடிகளின் தமிழ் சைவத் தமிழாகும். திரு. வி. க. வின் தமிழ் அரசியல் தமிழாகும். பாரதியாரின் தமிழ் இலக்கணத் தமிழாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/68&oldid=986124" இலிருந்து மீள்விக்கப்பட்டது