பக்கம்:எனது நண்பர்கள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கி. ஆ. பெ. விசுவநாதம்  87

திரு. சத்தியமூர்த்தியும் உயிர் தப்பினார். மறுநாள் இச்செய்தி சென்னைப்பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் வெளியாயின. சென்னை கவர்னருக்குக் கூட எட்டிவிட்டது. திரு. பாண்டியன் மீது சிலர் குறை கூறினர். சிலர் என்ன இருந்தாலும் பாண்டியன் இப்படிச் செய்யக் கட்டாது” எனக் குறை கூறினர். இது குறித்துப் பாண்டியர் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை விட்டார். அது:—

“நடந்த நிகழ்ச்சி வருத்தத்தைத்தருகின்றது. வதந்திகள் அதைவிட வருத்தத்தை அளிக்கின்றன. இக் கொடுமையை நான் செய்யவோ, செய்யத் துாண்டவோ இல்லை. அதற்கு ஒரே ஒரு சாட்சிதான் உண்டு. அதாவது—நான் செய்திருந்தால் சத்தியமூர்த்தியோ, காரோ பிழைத்திருக்க முடியாது. அவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்பதே நான் செய்யவில்லை யென்பதற்குப் போதுமான சாட்சி” என்பதே. இவ்வளவு துணிச்சலான மனம் படைத்தவர் வேறு எவரையும் நான் கண்டதில்லை.

பண்பு மிக்கவர்

அசோகா பிளாண்டேசன்’ என ஒரு கம்பெனியைத் திரு. பாண்டியன் தொடங்கினார். அப்போது அது பற்றிய பொருளாதாரத்திற்கு ஒரு பாங்கின் உதவி தேவைப்பட்டது. பாண்டியன் திருச்சி, திருநிதி பாங்க் செயலாளரோடு எனது இல்லத்தில் நெடுநேரம் பேசினார். பின் பாங்க் செயலாளர் கூறியது :—

‘ஒருவரைப் பார்க்கும் முன் அவரைப்பற்றிக்கேள்விப் :பட்டதெல்லாம் அவரை நேரில் பார்க்கும்போது பொய்யாய்ப் போய்விடுகிறது” என்றார். இதிலிருந்து பாண்டியனைப்பற்றி அவர் எவ்வளவு பயந்திருந்தார் என்பது விளங்கிற்று. உண்மையில் அவரைப் போன்ற உள்ளம் படைத்தவர்கள் நாட்டில் மிகக் குறைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/88&oldid=986335" இலிருந்து மீள்விக்கப்பட்டது