பக்கம்:எனது நண்பர்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

யவர் மறைமலை அடிகள். அவரைச் சைவர் அல்லர் என்று யாரும் சொல்ல முடியாது. இறையருள் பெற்றவரும், இறைவழிபாட்டில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவரும் ஆவார் மறைமலை அடிகள். அவர் மறைந்ததும், கி.ஆ.பெ. அவர்கள் நெக்குருகிப் பாடிய பாவைப் பாருங்கள்:

“மலையே! மறையே! மறைமலையே! சாய்ந்தனையோ!” அவர் உடல் எரிவதைப் பார்த்து,

“பெரியாரைப் போற்றும் பெருங்குணத்தை இழந்துவிட்டு

சிறியாரைப் போற்றிச் சீரழியும் தமிழ் மண்ணில்

.................

தமிழ் வாழ்வு வாழாமல் தமிழ் எரித்து வாழ்கின்றோம்”

கி ஆ.பெ. அவர்கள், திரு.வி.க.வினுடைய நன் மதிப்பை எவ்வளவு பெற்றிருக்கிறார் என்பதை திரு.வி.க. அவர்கள் தன்னுடைய அந்திமகாலத்தில், கி.ஆ.பெ. அவர்களைப் பார்த்து,

“நாடு இருக்கிறது...மொழி இருக்கிறது...மக்கள் இருக்கிறார்கள்...நீங்களும் இருக்கிறீர்கள்...பார்த்துக் கொள்ளுங்கள்”

என்று சொன்னதிலிருந்து, நன்கு புலப்படுகின்றது.

நம்மிலே பலருக்குத் தெரியாது. திருவள்ளுவர் திருநாள் என்று இப்போது நாம் கொண்டாடி வருகின்றோமே பொங்கல் நிகழ்ச்சிகளை ஒட்டி, இதைத் துவக்கி வைத்தவர் யாரென்று. பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் இதை ஆரம்பித்து வைத்தார் என்பதை அழகுற எழுதியிருக்கின்றார் கி.ஆ.பெ. அவர்கள். பேராசிரியர் நமச்சிவாய முதலியார், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் எவ்வளவு பெரிய