பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106


பேட்டையில் ‘சுலோசனா சதி’ நாடகம் முடிந்ததும் இரவு மூன்று மணி சுமாருக்கு பாவலர் அனுப்பியிருந்த காரில் நாங்கள் எல்லோரும் புறப்பட்டோம். சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள பாவலர் வீட்டுக்கு வந்து இரவோடிவராகக் குடியேறினோம். தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையிலிருந்து 1922 ஆகஸ்டு 3 ஆம் நாள் இரவு பாவலரின் பால மனோகர சபாவுக்கு வந்து சேர்ந்தோம்.

பாவலரின் திறமை

நாங்கள் வந்த இரண்டாம் நாள் ‘கதரின் வெற்றி’ நாடகம் வைக்கப்பட்டிருந்தது. அன்றைய நாடகத்திற்குச் சர்க்காரின் அனுமதி கிடைக்கவில்லை. பாவலர் காலையிலிருந்து படாத பாடு பட்டார். முன்னாள் இரவே டிராம் வண்டிகளில் பிரமாதமாக விளம்பரங்கள் கட்டப்பட்டுப் புறப்படத் தயாராய் இருந்தன. பாவலர் நேராகக் கவர்னரிடமே சென்றார். அப்போது ராஜதானியின் கவர்னராக இருந்தவர் லார்டு வெலிங்டன். பாவலர் சாரணர் படையில் ஒரு தளபதியாக இருந்தார். அந்தச் சலுகையில் எப்படியோ கவர்னரிடமே விசேஷ அனுமதி பெற்று வந்து விட்டார். பகல் 12மணிக்கு மேல் விளம்பரம் செய்யப் பட்டது. கதரின் வெற்றி நாடகம் சிறப்பாக நடைபெற்றது. அமோகமான வசூல். பாவலரை எல்லோரும் புகழ்ந்தார்கள். அன்று நடைபெற்ற கதரின் வெற்றி நாடகத்தில் நாங்கள் நடிக்கவில்லை.

புதிய நாடகங்கள் தயாரான வேகம்

மறுநாள் சுவாமிகளின் ‘சதியனுசூயா’ நாடகம் பாடம் கொடுக்கப்பட்டது. தந்தையாரும் பெரியண்ணாவும் எல்லாப் பாடங்களையும் எழுதிக் கொடுத்தார்கள். நடிகர்கள் மிகவிரைவில் நெட்டுருப் பண்ணிவிட்டார்கள். நாங்கள் வந்து சேர்ந்த ஒன்பதாவது நாள் சனி, ஞாயிறு இரு நாட்களிலும் ‘சதியனுகுயா’ நாடகம் நடத்தப் பெற்றது. ஒரு புதிய நாடகத்தை ஒன்பதே நாட்களில் அரங்கேற்றுவதென்பது வியப்புக்குறிய செய்தி யல்லவா? எங்களுக்கே வியப்பாகத்தான் இருந்தது. அந்த நாளிலிருந்த நடிகர்களின் நினைவாற்றலை எண்ணி அதிசயிக்கவேண்டியதாக இருக்கிறது. இந்த நாளில் குறைந்த பட்சம் பதினைந்து நாட்களாவது ஒத்திகை நடைபெற்றால்தான் சில நடிகர்களுக்குப்