பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி கலவரம்

திருநெல்வேலி நாடகம் முடிந்து தூத்துக்குடி சென்றோம். அந்த நாளில் அநேகமாக எல்லா ஊர்களிலும் ரெளடிகள் உண்டு. அவர்கள் நாடகக்காரர்களிடம் எப்போதும் தங்கள் கைவரி சையைக் காண்பிப்பது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஊரிலும் சில ரெளடிகளுக்கு ஒசி டிக்கட் கொடுத்துச் சரிப்படுத்துவதுண்டு. தூத்துக்குடியில் இப்படிப்பட்ட ரெளடிகள் அந்த நாளில் அதிகம். நாங்கள் துரத்துக்குடியில் நாடகம் துவக்கிய அன்று, சில் ரெளடிகள் கம்பெனி வீட்டுக்கு வந்தார்கள். நானும் மானேஜர் ஐயரும் திண்ணையில் உட்கார்ந்திருந்தோம். ஐயரிடம் அவர்கள் ஏதோ பேசினார்கள். எந்தக் கம்பெனி வந்தாலும் தாங்கள்தாம் நுழைவு வாயிலில் இருப்பது வழக்கமென்றும், அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை தரவேண்டுமென்றும் சொன்னார்கள். ஐயர், வந்தவர்களிடம் பொறுமையோடு பேசவில்லை. பேச்சு வளர்ந்து தகராறு முற்றியது. வந்த ரெளடிகள், ‘இன்று நாடகம் நடப்பதைப் பார்க்கலாம்’ என்று போய் விட்டார்கள். ஐயர் கோபத்தோடு, “இது என்ன வெள்ளரிக்காய் பட்டணமா?” என்று முணுமுணுத்தார். கொட்டகையோ மூக்கமேஸ்திரியின் பழைய ஓலைக் கொட்டகை. துரத்துக்குடியைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். எனவே, இரவு நாடகத்தின் போது என்ன நேருமோவென்று நான் பயந்து கொண்டே இருந்தேன்.

முதல் நாடகம் அபிமன்யு சுந்தரி. நாடகம் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. வெளிவாயிலுக்குச் சுமார் ஐம்பதடி தூரத்தில்தான் அரங்கின் நுழைவாயில். கொட்டகை முழுதும் மெல்லிய மூங்கிற் பாயினால் போடப் பெற்றிருந்தது. நான் மூங்கிற் பாயின் இடுக்குகளின் வழியாகவெளிவாயிலைப்பார்த்துக் கொண்டிருந்தேன். குழப்பம் ஏதாவது நடக்கிறதாவென