பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

175

ஹாலில் இரத்தினுவளி நாடகம் அரங்கேறியது. எம். கே. ராதா வசந்தகளுகவும், கே. கே. பெருமாள் பாப்ரவ்யளுகவும், என். எஸ். கிருஷ்ணன் டாம்ரவ்யனுகவும், சிறப்பாக நடித்தார்கள். சின்னண்ணா வாசவதத்தை இரத்தினவளி பாத்திரத்தை இரு பகுதிகளாகப் பிரித்து, முற்பகுதியைச் சேதுராமனும் பிற் பகுதியைச் செல்லமும் நடித்தார்கள். நாடகம் மிகவும் நன்றாய் இருந்ததாக அனைவரும் சொல்லிக் கொண்டார்கள்.

தம்பி பகவதி அதுவரை பபூன் வேடமே புனைந்து வந்தான். வாத்தியார் வந்ததும் அவனுக்கு வேறு வேடங்களும் கொடுக்கப் பட்டன. மனோஹரனில் ராஜப்பிரியன் வேடம் கொடுத்து, நன்முக நடிப்பும் சொல்லிக் கொடுத்தார். விளம்பரங்களிலும் அவனைப்பற்றித் தனியாகக் குறிப்பிட்டு எழுதினார். இராஜாம்பாள் நாடகத்தில் நான் வக்கீலாகவும், பகவதி பாரிஸ்டராகவும் நடிப்போம். கடைசியாக நடைபெறும் நீதிமன்றக் காட்சியில் ஆங்கிலத்தில் எனக்கும் பகவதிக்கும் வசனம் எழுதிக்கொடுத்தார். ஆங்கிலத்தை தாங்கள் தமிழிலேயே எழுதி நெட்டுருப் போட்டோம். ஆங்கிலம் நன்முக அறிந்தவர்கள் பேசுவதைப்போல் அந்த வசனத்தைப் பேசவும் எங்களுக்குப் பயிற்சி கொடுத்தார். நானும் பகவதியும் ஆங்கிலத்தில் பேசியதை ரசிகர்கள் பெருத்த கரகோஷம் செய்து வரவேற்றார்கள்.

இராஜேந்திரா

பாலக்காடு முடிந்து, கோயமுத்துர் சென்றதும் இராஜேந்திரா நாடகம் தயாராயிற்று. இராஜேந்திரா ஒரு சமூகச் சீர்திருத்த நாடகம், வரதட்சணையின் கொடுமையை உயர்ந்த முறையில் எடுத்துக் காட்டும் நாடகம். 1922ல் பாவலர் கம்பெனிக்குப் போன சமயம் வேஷத்தை நிறுத்திய பெரியண்ணா டி. கே. சங்கரன், நாவல் நாடகங்கள் தயாரானதும் வேடம் புனையத் தொடங்கினார். இராஜேந்திரனில் பெரியண்ணாவுக்கு ராகவன்வேடம் கொடுக்கப் பெற்றது. நான் ராகவனின் மகள், லட்சுமியாக நடித்தேன். ஒரு படுகொலையை நேரில் பார்த்ததால், லட்சுமிக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. அது மிகவும் சிரமப்பட்டு நடிக்க வேண்டிய காட்சி. அந்தக் காட்சியில் நடிப்பதற்கு வாத்தியார் எனக்குப் பிரத்தியேகப் பயிற்சி அளித்தார்.