பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208


பெரியண்ணா வற்புறுத்தவே ஒருவாறு இசைந்தார். ஒருநாள் மூக்குப்பரி வெளியில் இல்லாத சமயம் பார்த்து, தந்திரமாகக் கோபால் பிள்ளையை வெளியேற்றி ரயிலுக்கு அனுப்பிவைத்தோம். அவர் எவ்வித இடையூறுமின்றிக் கரூர் போய் சேர்ந்தார். கரூரிலிருந்து கடிதம் வந்தபிறகுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது

நாடகம் நல்ல வசூலுடன் நடைபெற்று வந்தது. யாழ்ப் பாணம் சண்முகம் பிள்ளைக்கு என்னை நிரம்பவும் பிடித்திருந்ததால், அவருடைய வேண்டுகோளின் பேரில் நான் சில நாடகங்களில் கதாநாயகனாக நடித்தேன். சத்தியவான் சாவித்திரியில் நாரதராகவே நடித்து வந்த நான், கொழும்பில் சத்தியவாகை நடித்தேன். சண்முகம்பிள்ளை என்னை மிகவும் பாராட்டினார். வெளியே எங்கும் போக முடியாததைப்பற்றி நாங்கள் - நடிகர்கள் கவலைப் படவில்லை. பகல் நேரங்களில் விளையாடுவதற்கு வேண்டிய வசதி கள் இருந்ததால் மகிழ்ச்சியாகவே பொழுதைப் போக்கிைேம்.

கலைவாணர் கற்பனையும் மன்னிப்பும்

ஒருநாள் மனோகரா நாடகம் நடந்தது.வழக்கம்போல் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் வசந்தனக நடித்தார். அவர் எந்த நாடகத்திலும் கற்பனையாக ஏதாவது வேடிக்கை செய்வார். அவரும் சின்னண்ணாவும் இதுபற்றி வீட்டிலேயே திட்டம் போட்டுப் பேசி முடிவு செய்து கொள்வார்கள். மனோகரனில் நந்தவனக் காட்சி நடைபெற்றது. வசந்தன் கல்லாசனத்தின் இழே ஒளிந்திருந்து மனோகரன் தன் தாயார் பத்மாவதியிடம் சபதம் செய்வதைக் கேட்கும் காட்சி அது. பத்மாவதி போன பின் விஜயாள் வந்து மனோகரன விளையாட அழைக்கிறாள். மலர் மாலையால் அவனைக் கட்டி இழுக்கிறாள். இந்தச் சமயத்தில் ராஜப் பிரியன் வந்து மனோகரனக் கேலி செய்கிறான், வசந்தன் கல்லா சனத்தின் கீழிருந்து வெளியே வருகிறான். முதுகு வளைந்துபோய் விட்டதாகப் புலம்புகிறான். அவனுடைய பைத்தியச் செயல்களைக் கண்டு எல்லோரும் சிரிக்கிறார்கள். வசந்தனின் தாய்வசந்தசேனை வருகிறாள். அவன் தன் தாயிடம் புகார் செய்கிறான். மனோஹரனும் விஜயாளும் தனியே ஒருபுறம் நின்று சிரிக்கிறார்கள். உடனே வசந்தன், “அண்ணாத்தே, நீ அந்த்ப் பொண்ணை வச்சுக்கிட்டு சிரி; நான் இந்தப்பொண்ணை வச்சுக்கிட்டுச் சிரிக்கிறேன்"