பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218


சங்கீத இயக்குநராகவும், எம். ஜி. ஆர். குழுவின் சங்கீத டைரக்ட ராகவும் விளங்கிய என். எஸ். பாலகிருஷ்ணனைத்தான் குறிப்பிடு கிறேன். என். எஸ். கிருஷ்ணன் திரைப்படத் துறையில் புகுந்த பின் அவர் பாலகிருஷ்ணனுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்ததாலும், தமது இடைவிடா முயற்சியிலுைம் இவர் ஒரு சிறந்த சங்கீத டைரக்டராக விளங்கினார்.

சங்கரமேனன்

கேரளப் பகுதிக்கு நாங்கள் சென்றபோது சங்கரமேனன் எங்கள்கம்பெனியில் சேர்ந்தார்.இவர் மிகநன்றாக ஆர்மோனியம் வாசிப்பார். ஏற்கனவே ஜெகன்னுதையர் கம்பெனியில் நீண்ட காலம் இருந்தவர். இவர் கம்பெனியில் சேர்ந்தபின் நடிகர்கள் எல்லோருக்கும் முறையாக சங்கீதப் பயிற்சி அளிக்கப்பட்டது. கே. ஆர். ராமசாமி, டி. கே. பகவதி, நான், சின்னண்ணா அனைவரும் இவரிடம் இசை பயின்றுவத்தோம். ஜண்டை வரிசை யிலிருந்து தொடங்கி, வர்ணம் வரை எல்லா நடிகர்களும் கர்நாடக இசையை இவரிடம் பயின்றார்கள். தியாகையர், திட்சிதர், சாமா சாஸ்திரி, பட்டினம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் தெலுங்கு வடமொழிக் கீர்த்தனைகளை இவர் நன்கு பயிற்றுவித்தார். ஏற்கனவே நல்ல இசைத் திறமையுள்ள நடிகர்கள், இவர் அளித்த பயிற்சியால் மேலும் தேர்ச்சிப் பெற்று விளங்கினார். சிலர் பிற்காலத்தில் இசைப்புலவர்களாகவே விளங்கு வதற்கு இவர் அளித்த பயிற்சியே பயன்பட்டதென்று சொல்ல வேண்டும். இவரை சங்கர பாகவதர் என்றே நாங்கள் அழைத்து வந்தோம். -

பெரியண்ணாவின் உறுதி

கம்பெனி தொடர்ந்து நடைபெற்று வந்தது. பெரியண்ணா வின் திருமணத்திற்குப்பின் நாங்கள் மதினியோடும், தாயோடும் தனியே வசித்து வந்தோம்; பெரியண்ணா வீட்டிற்கு வருவதே இல்லை. அம்மாவுக்கு இதனால் ஏற்பட்ட மன வருத்தம் சொல்லி முடியாது. பெரியண்ணாவுக்கு இரண்டாந் தாரமாக மற்றொரு அழகிய பெண்ணே மணம்செய்து வைக்க எவ்வளவோ முயன்றார், பெரியண்ணா மனைவியுடன் மனமொத்த வாழ்க்கை நடத்தவில்லை யென்றாலும், மறுதாரம் செய்து கொள்ளப் பிடிவாதமாக