பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

243


தேசபக்தி நாடகத்தில் நான் புரேசனாக நடித்தேன். சின்னண்ணா என் மனைவி சுதர்மா தேவியாக நடித்தார். ஈசான புரத்து மன்னன் அதிரதனாக புளி மூட்டை ராமசாமி நடித்தார். சேனதிபதி சேமவீரனாக நடித்தவர் யார் தெரியுமா? நகைச்சுவை நடிகர் எம். ஆர். சாமினாதன். அவர் மிக அழகாகக் கத்திச் சண்டை போடுவார். நானும் அவரும் தேசபக்தியில் ஆவேசத்துடன் கத்திச் சண்டை போடுவோம். எம். ஆர். சாமிநாதன் தான் எனக்குக் கத்திச் சண்டை போடக் கற்றுக் கொடுத்தார். எந்த வேடத்தைப் போட்டாலும் திறமையாகச் செய்யக் கூடியவர் சாமிநாதன் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அல்லவா? தேசபக்தி நாடகத்தில் சாமினாதனை எல்லோரும் பாராட்டினார்கள். என். எஸ். கிருஷ்ணன் பல வேடங்கள் புனைந்து சபையோரைப் பரவசப் படுத்தினார். காந்தி மகான் வில்லுப் பாட்டுக்குப் பலமுறை கைதட்டல் கிடைத்தது. நாடகத்திற்குப் பிரமாதமான பேர். ஆனால் வசூல்தான் அதற்கேற்றபடி இல்லை.

தம்பி பகவதி

இந்த நாடகத்தில் தம்பி பகவதி மற்றொரு சுதந்திர வீரன் நாகநாதனாக நடித்தார். புரேசனும் சேமவீரனும் வாட்போர் புரியும் பொழுது, நாகநாதன் சேமவீரனோடு வந்த காவலர்களுடன் சண்டையிட்டு அவர்களை விரட்டவேண்டும். தம்பி பகவதிக்குக் கத்திச் சண்டைபோட அவ்வளவாக வராது; கட்டிப் புரண்டு மற்போர் புரிவதென்றால் நிரம்பப் பிடிக்கும். எனவே நாகநாதன் காவலர்களுடன் மற்போர் புரிந்து விரட்டுவதாக அமைத்துக் கொண்டோம். தம்பி பகவதிக்கு மற்போர் பிடிக்கும் என்று சொல்லும் இந்தச் சமயத்தில் மதுரையில் நடந்த மற்றொரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. அப்போது கம்பெனியில் முதன்மையான பெண் வேடதாரிகளில் ஒருவராக இருந்தார் ஒரு நடிகர். அவரை ஊருக்கு அழைத்துப்போக அவரது மாமனரும் தமையனும் வந்திருந்தார்கள். தம்பியை ஜெகன்னாதய்யரின் கம்பெனியில் சேர்ப்பது தமையனின் திட்டம், பெரியண்ணா இதைப் புரிந்து கொண்டார். அந்த நடிகர் முக்கிய பாத்திரமாக நடிக்க வேண்டிய நாடகங்கள் நடக்க வேண்டியிருந்