பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

265


நடந்தது. நாடகம் நடந்து கொண்டிருந்தது. சுண்டுர் இளவர சன் சந்திரவதைைவப் பலாத்காரம் செய்யப்போய் உதை வாங்கும் கட்டம். நாடகத்தில் இது ஒரு சுவையான காட்சி.

பரிதாப பலாத்காரம்

பூங்காவில் சந்திரவதனா உலாவிக் கொண்டிருக்கிறாள். சுண்டூர் இளவரசன் அங்கு வருகிறான், தனக்கு அவள் மீதுள்ள தணியாக் காதலைப்பற்றி விவரிக்கிறான், சந்திரவதனா. அவனை விரும்ப மறுக்கிறாள். கடைசியில் வெறி கொண்ட இளவரசன் அவளைப் பலாத்காரம் செய்ய முயல்கிறான். சந்திரவதனா கூச்ச லிடுகிறாள். அவள் காதலன் ராகவரெட்டி திடீரென்று தோன்றி, சுண்டுர் இளவரசனை அடித்து வீழ்த்திச் சந்திரவதனவைக் காப்பாற்றுகிறான்... காட்சி இவ்வாறு நடைபெற வேண்டும்.

இந்தச் சுவையான காட்சி தொடங்கியது. சுண்டுர் இளவரசன் வந்தார். சந்திரவதனாவிடம் தனது காதலின் தன்மையைப் பற்றி அபாரமாக அளந்தார். தமிழில் மட்டுமல்ல; ஆசிரியர் திரு எம். கந்தசாமி முதலியார் பயிற்சியளித்திருந்தபடி ஆங்கிலத்திலும், தான் கொண்ட ‘லவ்’வைப் பற்றிப் பொழிந்துதள்ளினார். பலிக்கவில்லை. கடைசியாக,

அட்டியின்றி கட்டி
முத்தமிடாவிடில் நானே-உன்னைத்
திட்டம் பலாத்காரம் செய்குவேன்
சத்தியம் தானே

என்று பாட்டிலேயே சத்தியமும் செய்துவிட்டுச் சந்திரவதனாவைப் பலாத்காரம் செய்வதற்குப் பாய்ந்தார். வழக்கம் போல் சந்திரவதனா பக்கத்தட்டிவரை ஓடினாள்; கூச்சலிட்டாள். இளவரசன் அவள் கையைப் பிடித்துவிட்டான். அடுத்த விநாடியில் ராகவ ரெட்டி வந்து இளவரசன் முதுகிலே அறைய வேண்டும்.

எங்கே ராகவரெட்டி?... காணோம் அவரை! சந்திரவதனாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எதிரே காதலரைக் காணவில்லை. வேறு எங்கிருந்தாவது வரக் கூடுமென நம்பி இளவரசனின் பிடியிலிருந்து திமிறுவதுபோல் சிறிது நடித்தாள். ராகவரெட்டி வரவே இல்லை. திரைமறைவில் பல குரல்கள் ராகவரெட்டியைத் தேடின. முதுகில் அடி விழுவதை எதிர்