பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

335

 பண்ணுருட்டியில் 1934இல் நிறுத்தப் பெற்ற மாதக் கையெழுத்துப் பத்திரிகையாகிய அறிவுச்சுடர் மீண்டும் வார இதழாக மறு மலர்ச்சிபெற்றது. நடிகர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். நன்றாக எழுதவும் திறமை பெற்றார்கள். எழுதப் படிக்கத் தெரியாமல் கம்பெனியில் சேரும் இளைஞர்கள் பலர். அவர்களின் அறிவுப்பசியினைப் போக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்தோம். சுந்தரமூர்த்தி என்னும் தமிழாசிரியர் ஒருவரையும் தேவராஜு என்னும் ஆங்கில ஆசிரியர் ஒருவரையும் மாதச் சம்பளத்திற்குக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம் . அவர்கள் காலையிலும் மாலையிலும் பாடம் சொல்லித்தர வேண்டும். இரவு நேரங்களில் தேவைப்பட்டால் அரங்க வாயில்களில் நிற்க வேண்டும். இவை போன்ற பொது அறவு வளர்ச்சிக்குரிய முயற்சிகளெல்லாம் எங்கள் குழுவிலேதாம் நடை பெற்றன என்று சொல்லிக்கொள் வது எங்களுக்குப் பெருமையல்லவா? நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி, கடிகமணி டி.வி. நாராயணசாமி, நக்கீரர், என். எஸ். காராயணபிள்ளை, தம்பி பகவதி, பிரண்டு ராமசாமி மற்றொரு சிறந்த நடிகர் சி.வி. முத்து முதலிய பலர் அறிவுச் சுடரில் தொடர்ந்து கட்டுரை கதைகள் எழுதி, நன்கு பயிற்சி பெற்றார்கள். இப்போது அறிவுச் சுடர், வாரப் பத்திரிகையாதலால் எனக்குச் சிறிதும் ஒய்வே கிடைப்பதில்லை. ஆங்கிலம் பயில எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் நேரம் கிடைக்கவில்லை. பகல் உணவுக்குப்பின் உறங்குவதைக் கூட நிறுத்தி விட்டேன். எல்லோரும் இரவு நாடகத்தை முன்னிட்டு உறங்குவார்கள். நான் அமைதியாக அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். அறிவுச் சுடரை வாரந் தோறும் தவறாமல் வெளியிட்டு வந்தேன்.

இம்முறை ‘அறிவுச் சுடர்’ பத்திரிகையினுல் குழப்பம் எதுவும் உண்டாகவில்லை. நடிகர்கள் அனைவரும் உற்சாகமாக எழுதி வந்தார்கள். வாரந்தோறும் இரண்டு பிரதிகளை எழுதி வெளியிடுவது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. எல்லோரும் புனே பெயரிலேயே எழுதி வந்ததால் பத்திரிகை எழுதும் பொறுப்பை மற்றவரிடம் விடவும் முடியவில்லை. இரவு நாடகம் முடிந்து உறங்குவதற்கு மூன்று மணியாய்விடும். காலையில் மற்ற நடிகர்களைப் போல் பத்து மணிவரை உறங்கும் பழக்கமும் எனக் கில்லை. ஆறுமணிக்கே எழுந்துவிடுவேன். பகல் உணவுக்குப்பின்