பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

வதற்காக ஒரு நாள் காலையில் கொட்டகைக்கு வந்தார். பாடல்களைச் சுத்தமாகவும் கர்னாட சங்கீதத்திலும் அமைந்திருப்பதாகவும், நன்றாகப் பாடியதற்காகவும் எங்களை மனமாரப் பாராட்டினார். அன்று முதல் அவரோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. புராண இதிகாசங்களில் புதுமை காண விழைந்தோம். திருமாலின் லீலைகளே தசாவதாரம், ஸ்ரீ கிருஷ்ணலீலா, இராமாயணம், மகாபாரதம் முதலிய கதைகளாக நாடக சினிமா உலகில் நடமாடி வந்தன. சிவபெருமானின் திருவிளையாடல்கள் எதுவும் மேடையிலோ, திரைப்படங்களிலோ வந்ததில்லை. எனவே அவற்றை மேடையில் தோற்றுவிக்க எண்ணினோம்.

சூலமங்கலம் பாகவதர் சிவபுராண ஆராய்ச்சியில் பெரும் புகழ் பெற்றவர். எனவே அவரிடம் எங்கள் எண்ணத்தை வெளியிட்டோம். திருவிளையாடல் புராணத்தை நாடகமாக்கித் தருவதாக அவர் ஒப்புக் கொண்டார். அந்நாடகத்திற்குச் சிவலீலா என்ற பெயர் பொருத்தமாயிருக்குமெனச் சின்னண்ணா கூறினார். சிவலீலா நாடக முயற்சி தொடங்கப் பெற்றது. பாகவதரும் சின்னண்ணாவும் தனியே கலந்து திருவிளையாடல் புராணத்தில் எந்தெந்தப் படலங்கள் நாடகத்திற்குச் சுவையளிக்கும் என்பதைப் பற்றி ஆராய்தார்கள்.

சிவலீலா

பொன்னமராவதியிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தோம். திருச்சியில் நாடகங்களுக்கு வசூல் இல்லை. பாகவதர் எழுதிய சிவலீலா வந்தது. புதிய நாடகத்தைத் தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டோம். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் எங்கள் குடும்பத் தோழர். பிரபல அமைச்சூர் நடிகர் எப்.ஜி. நடேசய்யர் எங்கள் உற்ற நண்பர். டாக்டர் ஒ.ஆர். பாலு எங்களுக்குப் பலவகையில் உதவியவர். இவர்களெல்லாம் சிவலீலா பெற்றிகரமாக உருவாக யோசனைகள் கூறினர். பொருள் வசதியில்லாத நிலையில் எந்த யோசனையைத்தான் செயல்படுத்த முடியம்? இருந்தாலும் சிவலீலாவைத் திருச்சியில் எப்படியும் அரங்கேற்ற முனைந்தோம். பாடம் கொடுத்தோம். முஸ்லீம் கவிசர் சையத் இமாம் புலவர் சிவலீலாவுக்குப் பாடல்களை புனைந்தார். ஏற்கனவே எப்.ஜி. நடேசய்யரின் ஞான சௌந்தரிக்குப்