பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352


டாக்டர் ஒ. ஆர். பாலு முதலியோர் நாடகத்தை வெகுவாகப் பாராட்டினார்கள்.

டி. வி. நாராரணசாமி

எட்டையபுரம் ராஜாவின் பரிந்துரையோடு எங்கள் குழுவில் சேர்ந்த டி. வி. நாராயணசாமி சிவலீலாவில் சிவபெருமானாக நடித்தார். சிவபெருமான் பக்தர்களுக்காக மேற்கொள்ளும் மாறு வேடங்களை எல்லாம் நான் நடித்தேன். ஏ. பி. நாகராஜன் பார்வதியாகவும், பின்னல் வலை வீசும் படலத்தில் கயற்கண்ணியாகவும் நடித்தார். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி வடநாட்டு இசைப்புலவர் ஹேமநாதனாகவும், எட்டையபுரம் அரசர் கம்பெனி யிலிருந்த நன்றாகப் பாடும் திறமைப் பெற்ற சங்கரநாராயணன் பாணபத்திரராகவும், பிரண்டு இராமசாமி தருமியாகவும் நடித்தார்கள். நகைச் சுவைச் செல்வன் டி. என். சிவதாணு தொடக்க முதல் இறுதிவரைப் பல வேடங்களில் தோன்றிச் சபையோரைப் பரவசப்படுத்தினார். டி. வி. நாராயணசாமிக்குச் சிவபெருமான் வேடப்பொருத்தம் சிறப்பாக அமைந்தது. கம்பெனியில் சேர்ந்த தொடக்க நாளில் நாராயணசாமி துச்சாதனகை நடித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. வீர அபிமன்யு நாடகத்தில் துச்சாதனனுக்கு வசனம் எதுவும் இல்லை. பேருக்கு ஒருவர் வேடம் புனைந்து நிற்க வேண்டியதுதான். அப்படி எண்ணித்தான் இவரை போட்டோம். ஆனால் துரியோதனாதியர் அனைவரையும் கட்டி நிறுத்தி இலக்கண குமாரனுக்கு ஐந்து குடுமிவைத்து, அரசாணிக் காலிலே கட்டும்நாடகத்தின் இறுதிக்கட்டத்தில் டி. வி.நாராயண சாமி எங்களேயெல்லாம் திணறவைத்துவிட்டார். அவர் காட்டிய வீரமும் ஆவேசமும் அடேயப்பா!... துச்சாதனனை அடக்குவது எங்களுக்குப் பெரிய தொல்லையாகப் போய்விட்டது. அதற்கு முன்பெல்லாம் இவ்வேடம் புனைந்த துச்சாதனார்கள் இடித்த புளி போல் நின்றுகொண்டிருப்பார்கள். அவர்கள் முகத்தில் எவ்வித உணர்ச்சியும்இராது. வார்த்தைகள் எதுவுமில்லாத அந்தவேடத்திலேயே டி. வி. நாராயணசாமியின் நடிப்பாற்றல் என்னைக் கவர்ந்தது. அதன் பிறகு அவருடைய திறமைக்கேற்றவாறு விரைவில் முன்னேறினார். இராமாயணத்தில் அவர் இலட்சு மணனாக நடித்தது இன்னும் என் மனக்கண் முன் நிற்கின்றது.