பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370


இல்லையேல் இந்தப் படத்துறையே நமக்கு வேண்டாம் என்று எண்ணினோம். படமும் நாடகமும் ஒரே சமயத்தில்பல வாரங்கள் மதுரையில் ஓடியதால் எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. நல்ல காலம் பிறந்ததாகவே கருதினோம். வெற்றிக் களிப்பில் வருவாய் முழுதும் செலவிட்டுச் சிவலீலாவுக்குப் புதிய காட்சிகள் தாயாரித்தோம்.

இனிக்கும் இராமாயணம்

சிவலீலாவைத் தயாரிக்க உதவியாக ஸ்ரீகிருஷ்ணலீலா தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்றது. சம்பூர்ண ராமாயணமும் தொடர்ச்சியாக நடந்தது. அது இரவு 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் விடிய 6 மணிவரை நடைபெறும் நாடக மாதலால் இடையே ஒரு நாள் ஒய்வு விட்டு மறுநாள் நடை பெற்றது. இராமாயணத்திற்கு மதுரையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான மக்கள் இடமின்றித் திரும்பிச் சென்றனார். அன்று நடைபெற்ற இலக்கியச் சுவையும் இசைச் சுவையும் நிரம்பிய இராமாயணத்தை இன்று நினைத்தாலும் உள்ளமெல்லாம் இனிக்கிறது! நடிகர்களின் பட்டியலைப் பாருங்கள். கலைஞர் ஏ. பி. நாகராஜன் சீதை, கலைமாமணி எம். எஸ் திரெளபதி மாயா சூர்பநகை; சங்கீதமேதை சங்கரநாராயணன் தசரதர்; பிரண்டு ராமசாமி விசுவாமித்திரர்; நடிகமணி டி. வி. நாராயணசாமி இலட்சுமணன்; தம்பி பகவதி இராவணன், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி அனுமார் இராமர் நான், நகைச்சுவைச் செல்வன் டி. என். சிவதாணு தொடக்க முதல் இறுதிவரை பல நகைச்சுவை வேடங்கள். திருவாரூர் சீனிவாசன் பரதன். இவருடைய பரதன் நடிப்பைக் கண்டு தோழர் ஜீவானந்தமும் அறிஞர் அண்ணாவுமே கண்ணீர் விட்டிருக்கிறார்களென்றால் இவர் நடிப்பின் சிறப்புக்கு வேறென்ன நற்சான்று வேண்டும்?

திருமண ஏற்பாடுகள்

சிவலீலா தொடங்குமுன் எனக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. நாகர் கோவிலிலும் திருவனந்தபுரத்திலும் என் ஒன்றுவிட்ட அண்ணா திரவியம் பிள்ளையுடன் சென்று முன்பே