பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நடிப்பிசைப் புலவர் இராமசாமி

சிவலீலா 35 நாட்கள் தொடர்ந்து நடந்தது. நாடகத்திலே கே. ஆர். இராமசாமிக்கு ஹேமநாதர் வேடம். நன்றாகப் பாடி, பாண்டியன் அவையில் கச்சேரி செய்ய வேண்டிய வேடம் அது. இராமசாமியின் சொந்த ஊர் குடந்தையின் அருகிலேயுள்ள அம்மாசத்திரம். அவரது வயது சென்ற தந்தையார் மரணப் படுக்கையிலே கிடந்தார். இப்பவோ, இன்னும் சற்றுநேரத்திலோ என்ற நிலையில் அவரது உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. தின சரி நாடகமல்லவா? பகலெல்லாம் தந்தையின் பக்கத்திலிருந்து பரிவு காட்டுவார். இரவு நாடகத்தில் நடிக்க வந்து விடுவார். மிகவும் களிப்போடு கலகலப்பாக இருக்க வேண்டிய பாத்திரம் ஹேமநாதர். வேடம் புனையும்போது அவர் முகத்திலே கவலை தோய்ந்திருக்கும். மேடைக்கு வந்ததும் களிப்பும் கலகலப்பும் வழக்கம்போல் கூத்தாடும்.

சிவலீலா கடைசிநாள். கலைஞர் இராமசாமி வழக்கம்போல் மூன்று மைல் தொலைவிலுள்ள அம்மாசத்திரம் சென்றிருந்தார். அன்று பகல் எங்களுக்குச் செய்தி வந்தது, அவரது தந்தையார் அன்றே இறுதிநிலை எய்திவிடக்கூடுமென்று. சிவலீலா தொடர்ந்து நடைபெறும் நாடகமாதலால் இதை எதிர்பார்த்து முன்னதாகவே ஏற்பாடு செய்து வைத்தோம். எனவே அன்றிரவு இராமசாமி வர வேண்டாமென்றும், தந்தையின் அருகிலேயே இருக்கும்படியும் தகவல் அனுப்பினோம், இரவு நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது, ஊசலாடிக் கொண்டிருந்த உயிர் அடங்கி விட்டதாகச் செய்தி கிடைத்தது. மறுநாள் காலை எல்லோரும் அம்மாசத்திரத்திலுள்ள அவர் இல்லம் சென்றோம். சவ அடக்கத்திற்கும் உடனிருந்து ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பினோம்.

அன்று இராமாயணம் வைக்கப்பட்டிருந்தது. பிற்பகுதியில் முக்கிய இடம் பெறும் ஆஞ்சநேயர் பாத்திரத்தை ஏற்று அற்புத