பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

419


என்று வள்ளுவர் கூறயிருக்கிறாரல்லவா? இதற்கு இலக்கியமாக விளங்குபவர் பெரியண்ணா. அவ்வளவுதான், சுப்பையாவுக்கு நல்ல அடி. ஒவியர் தேவராஜய்யர். கணக்குப்பிள்ளை தர்மராஜு யார் யாரோ குறுக்கே வந்து தடுத்தார்கள். பயனில்லை. பலமாக அடித்த பிறகுதான் ஒய்ந்தார் அண்ணா. அப்போது இரவு மணி ஏழு. அன்று ஸ்ரீ கிருஷ்ண லீலா நாடகம். நான் கொட்டகையை அடுத்த ஒரு வீட்டில் குடியிருந்தேன். இரவு 8-30 க்குத் தியேட்டருக்கு வந்தேன். சுப்பையா என்னிடம் வந்தார். “என் மீது ஒரு குற்றமும் இல்லை. கறுப்பு இராமசாமியும், சிவப்பு இராமசாமியும் கோள் மூட்டியதால் பெரியண்ணாச்சி என்னை அநியாயமாக அடித்து விட்டார்” என்றார். அவர் உடம்பில் அடிபட்ட காயங்கள் இருந்தன. நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். இதே போன்று தம்பி பகவதி, எஸ். வி. சகஸ்ரநாமம் போன்றவர்களெல்லாம் கூட அடி வாங்கியவர்கள் தாம் என்று கூறி அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். இரு இராமசாமிகளையும் பெரியண்ணாவிடம் புகார் கூறியதற்காகக் கடிந்து விட்டு வெளியே சென்றேன்.

நள்ளிரவில் சென்ற கலைஞர்

சுப்பையா சோகமே உருவாக ஒருபுறம் உட்கார்ந்திருந்தார். இரவு மணி 9. இன்னும் அரைமணி நேரத்தில் நாடகம் தொடங்க வேண்டும். அன்று நாடகத்தில் சுப்பையாதான் வசு தேவர். அவரோ வேடம் புனையவில்லை. முதல் காட்சியிலேயே வசுதேவர் வரவேண்டும். இரண்டொருவர் சுப்பையாவிடம் போய் இன்னும் வேடம் புனையவில்லையா?’ என்று கேட்டார்கள். அவர் வேடம் புனைய மறுத்து விட்டார். சுப்பையா வசு தேவர் போட மறுக்கிறார் என்று சொல்லி எனக்கு ஆள் வந்தது. பகவதி அன்று கம்சன், கே. ஆர். இராமசாமியும், பகவதியும் மாறி மாறிப் போடுவார்கள். அன்று பகவதியின் முறை. பகவதி கம்சன் வேடத்தோடு வந்து, வேடம் புனையும் படியாகச் சுப்பையாவிடம் கூறினார் போல் இருக்கிறது. சுப்பையா அவரிடமும் மறுத்து விட்டார். ஒப்பனை அறையில் ஒரே ரகளே. சுப்பையா வேடம் புனைய மறுப்பதாகப் பெரியண்ணாவிடம் சொல்ல ஆள் போய் விட்டதாக அறிந்தேன். எனக்கும் தகவல் வந்தது. நான் வந்து சுப்பையாவிடம் எவ்வளவோ சொன்னேன். அவர் ஒரே