பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

423


இயலவில்லை. இரண்டு காட்சிகளில் நடித்தேன். மின்சார வெளிச்சம் மேடையில் மேலும் வெப்பத்தை உண்டாக்கியது. ஏதோ தலை சுற்றுவது போலிருந்தது. அவ்வளவுதான். மயங்கி விழுந்து விட் டேன். காரணம் எல்லோருக்கும் புரிந்தது. என் உடைகளைத் தளர்த்தி மின்விசிறியின் கீழே படுக்கவைத்தார்கள். ஐந்து நிமிடங் களுக்குப் பிறகுதான் நினைவு வந்தது. எப்படியோ ஒருவகையாக நடித்து நாடகத்தை முடித்தேன். மறுநாள் இந்தச் செய்திகளை யெல்லாம் இராமசாமிக்கு விவரமாக எழுதினேன். உன்னுடைய அருமையும் பெருமையும் இப்போது முன்னைவிட அதிகமாகப் புரிகிறது. உனக்கு அடுத்தபடியாக உன்னுடைய வேடங்களைப்புனைய தகுதியுடையவனுக இருந்த சுப்பையா கம்பெனியை விட்டு விலகு வதற்கு நீயே காரணமாக இருந்தாய். இப்போது நீயும் விலகிக் கொண்டாய். நான்தான் உன் வேடத்தைப் போட்டுக் கொண்டு அவஸ்தைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தேன். ஏறத்தாழ ஐந்து மாத காலம் பாலக்காட்டில் நாடகம் நடத்திவிட்டு ஈரோட்டுக்குப் பயணமானோம்.