பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

430


நான் இறந்துவிடப் போகிறேன்” என்ற நினைவே மரண வேதனையைத் தருவதல்லவா? இந்த வேதனையை அவள் எப்படித்தான் தாங்கினாளோ இறைவனுக்குத்தான் தெரியும். அவள் கேள்விக்கு நான் என்ன பதில் கூறுவது? மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு “அப்படியொன்றும் இல்லை; நீ அமைதியாக உறங்கு” என்று சொன்னேன்...

மறுநாள் 2-11-1943 அன்று மாலை ஆறு மணியளவில் என் குடும்ப விளக்கு அணைந்தது. மீனாட்சி என்னை விட்டுப் போய் விட்டாள். மறுநாள் முற்பகல் 11 மணிக்கு, காவிரிக் கரையில் என் அருமை மனைவியின் சடலத்திற்கு நானே எரியூட்டினேன்.

அடுத்த வாரம் திராவிடநாடு இதழில் இருண்ட வீடு என்னும் தலைப்பில் அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தலையங்கம் தீட்டி எனக்கு ஆறுதல் கூறி யிருந்தார்.