பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


காரதா கலகப்ரியா:

நாடகக் கம்பெனி மதுரை புட்டுத்தோப்பிலுள்ள ஒரு வீட்டில் இருந்து வந்தது. நாடகங்களுக்குப் பயிற்சி நடந்து கொண்டிருந்ததால் நாங்கள் கம்பெனி வீட்டிலேயே தங்கினோம். எனக்கு முதன்முதலாகச் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் நாரதர் வேடம் கொடுக்கப்பட்டது. அப்போது கம்பெனியிலிருந்த நடிகர்கள் அனைவரிலும் நான் தான் மிகச் சிறியவன். அதனால் ஆசிரியர் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு என்மீது அளவு கடந்த பற்றுதல். அவர் என்னைப்பற்றி என்ன நினைத்தாரோ எனக்குத் தெரியாது. அநேகமாக எல்லா நாடகங்களிலும் எனக்கு நாரதர் வேடமே கொடுக்கப்பட்டது.

கம்பெனியில் அப்போது ‘சட்டாம் பிள்ளை’யாக இருந்து பாடங்கள் சொல்லி வைத்தவர் திரு டி. எஸ். குற்றாலிங்கம்பிள்ளை. சீமந்தனி, சதியனுகுயா, சுலோசன சதி, பார்வதி கல்யாணம் முதலிய நாடகங்களில் எல்லாம் நாரதர் வேடமே எனக்குக் கிடைத்தது. தொடர்ந்து நான் நாரதர் பாடம் செய்து வருவதைக் கண்ட மற்றப் பிள்ளைகள் என்னைக் கேலி செய்தார்கள். “நாரதா, கலகப் பிரியா” என்றெல்லாம் அடிக்கடி என்னைப் பெயர் வைத்துக் கூப்பிட்டார்கள். இந்தச் செய்தி சுவாமிகளின் செவிக்கும் எட்டியது. அவர் ஒருநாள் எல்லோரும் இருக்கும் சமயத்தில், “நாரதர் கலகக்காரர்தான்; ஆனால், அவர் செய்யும் கலகத்தினால் யாருக்கும் கெடுதி நேராது; நன்மையே விளையும்” என்று விளக்கம் தந்தார்.

வையை யென்னும் பொய்யாக் குலக் கொடி

புட்டுத்தோப்பில் கம்பெனி வீட்டிற்கு எதிரே முழுதும் ஒரே மணற் பரப்பு. வைகையாறு எதிரே இருந்ததால் தினசரி காலையில் ஊற்று நீரில் குளிப்பதற்கும், மாலே நேரங்களில் “பலிஞ் சடுகுடு விளையாடுவதற்கும் எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. “வையை யென்னும் பொய்யாக் குலக்கொடி” என்று சங்க இலக்கியம் வைகையின் வளத்தைப் பற்றிப் பேசுகிறது. அதெல்லாம் பழங்காலம். இப்போதெல்லாம் மழைக் காலங்