பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

451


இவைகளில் முதலாவதான. வேதம் அரசனைப்போல் கட்டளையிட்டு, நல்ல காரியங்களைச் செய்ய ஏவுகிறது. இரண்டாவதான புராணங்கள், ஆருயிர் நண்பனைப்போல நயமொழிகளால் கதைகளின் மூலம் நல்ல செயல்களைக் செய்யத் தூண்டுகின்றன. நாடகங்களோவெனில் அழகும் கற்பும் அமுதமொழியும் அமைந்த மனேவி, கணவனைத் திருத்துவதுபோல் கெட்ட ஒழுக்கம் உள்ளவரையும் நல்லொழுக்க முள்ளவராக்குகின்றன.

இத்தகைய தெய்வக் கலையை, மாசற்ற கலையை, உலகம் போற்றும் உத்தமர் மகாத்மாவுக்குச் சத்திய வழி காட்டிய கலையை, கல்வியறிவு இல்லாதவர்களுக்குக் கல்வி புகட்டும் கலையை, தானும் பயனுற்றுப் பிறருக்கும் பயனைக் கொடுக்கும் பண்புள்ள கலையை, தீண்டாமையை ஒழிக்கும் கலையை, ஜாதி பேதம் போக்கும் கலையை, தாய்நாட்டின் பெருமையை உயர்த் தும் தவக்கலையை நன்கு உலகுக்குப் பயன்படுத்த வேண்டுமானல் அரசாங்கத்தாரும் பொதுமக்களும் நடிகர்களும் ஒத்துழைத்து, இவ்வரும் பெரும் நாடகக் கலை தன் பழம்பெரும் சிறப்புகளி லிருந்து என்றும் குன்றாது வளர்ந்தோங்கி வர, எல்லாம் வல்ல அன்னை ஆதிசக்தி அருள்புரிவாளாக!”

நவாப் அவர்கள் பேசியதும் இலக்கியமும் சம்பிரதாயமும் என்னும் தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.ஆர் மயிலேறு எம். ஏ. அவர்களும், நாடகத்தில் பெண்கள் என்னும் தலைப்பில் பிரபல நடிகை திருமதி பி. எஸ். சிவபாக்கியம் அவர்களும் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து நகைசுவை மன்னர் என். எஸ். கிருஷ்ணன் நாடகமும் சினிமாவும் என்ற பொருளை நகைச்சுவை ததும்பப் பேசினார். அவரது பேச்சின் சுருக்கம் பின்வருமாறு.

“தலைவர் அவர்களே, பெரியோர்களே, அன்பர்களே எல்லோரும் சொல்கிறர்கள் நாடகக் கலை எங்கேயோ மறைந்து போய் விட்டதென்று. அது இருந்த இடத்தையே கானோம்; முன்பு உச்சாணிக் கொப்பில் இருந்தது. இப்பொழுது பாதாளத்தில் விழுந்து விட்டது என்று இந்தப் பேச்சுக்களெல்லாம் வெறும் பொய். உண்மை கலவாத பொய். நாடகக்கலை எங்கும் போய்விட