பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


இருந்ததால் வந்தவுடனேயே சபையில் கைதட்டலும் கலகலப் பும் ஏற்பட்டன. பாட்டு முடிந்ததும் அசுவபதி ராஜா, அவர் மனைவி மாளவி, புதல்வி சாவித்திரி மூவரும்பாட்டுப்பாடி என்னை வணங்கி உட்காரச் சொன்னார்கள். மேடையில் உயரமான நாற். காலி போடப்பட்டிருந்தது.ஒரு கையில் வீணை இருந்ததால் அந்த உயரமான நாற்காலியில் உட்கார இயலாமல் நான்சற்று, தயங்கினேன். பிறகு கையிலிருந்த வீணையைக் கீழே போட்டுவிட்டு, நாற்காலியைப் பிடித்து ஏறி ஒருவாறு அதில் உட்கார்ந்தேன். சபையில் அதற்கும் கை தட்டினார்கள். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. பாடத்தை மட்டும் தவறாமல் பேசினேன்; பாடினேன். ஒருவகையாக நாரதரின் முதல் காட்சி முடிந்தது.

உள்ளே வந்ததும் சுவாமிகள் என்னைத் தூக்கி முத்தமிட்டுப் பாராட்டினார். ‘பையன் சீக்கிரம் முன்னுக்கு வந்துவிடுவான்’ என்று எல்லோரும் புகழ்ந்தார்கள். நாரதர் வர வேண்டிய அடுத்த காட்சி. எமதரும ராஜனின் சபை. நான் மகிழ்ச்சியோடு சபையில் பிரவேசித்தேன். எமனுக்கும் எனக்கும் வாதம் நடந் தது. சத்தியவான் உயிரைக் கவரக் கூடாதென நான் பலமுறை வேண்டிக் கொண்டேன். எமதருமன் சாதாரணமாக வாதித்துக் கொண்டே வந்தவர், இறுதியாகக் கோபம் கொண்டு, “எட்டி நில்லும் நாரதரே” என்ற பாட்டைத் தொடங்கித் தன் கையிலிருந்த சூலாயுதத்தை நீட்டிக் கொண்டு என்னை நெருங்கினார்.

நான் பயந்து அலறிய வண்ணம் உள்ளே ஓடிப் போய் சுவாமிகளைக் கட்டிக் கொண்டேன். சபையில் ஒரே சிரிப்பு, கோலாகலம். திரை விடப்பட்டது.

சுவாமிகள் பரிவு

அன்று எமன் வேடம் போட்டிருந்தவர் கந்தசாமி என்னும் பெயருடையவர். அவருடைய ஊர் துரத்துக்குடி. வேஷம் போட்டு ஒத்திகை பார்ப்பதெல்லாம் அப்போது கிடையாது. முகமெல்லாம் நீலத்தைப் பூசி, பெரிய கறுப்பு மீசை எழுதி, கண் களில் ஏதோ விழி பிதுங்கியது போன்ற ஒரு நீலக்கண்ணாடியைப் போட்டுக்கொண்டு, பயங்கரமான தோற்றத்தில் நின்ற கந்த