பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

465


பகவானின் சிலை, கலைபயில் மண்டபம், நிலவுக்காட்சி, சிறைச் சாலை. நாடகத்திற்குப் புதிய ஆடையணிகளும் தயாராயின, ஒரு சிறந்த இலக்கிய நாடகத்தை எந்தெந்த வகையில் அழகு படுத்த முடியுமோ அந்த வகையிலெல்லாம் பில்ஹணனை அழகு செய்தோம். இந்நாடகத்தில் பில்ஹணனாக நான் நடித்தேன். கதாநாயகி யாமினியாக திரெளபதி நடித்தாள். பில்ஹனனில் அவளுடைய அருமையான நடிப்பினை இப்போதும் எண்ணிப் பார்க்கிறேன்; மறக்க முடியவில்லை! இன்னொருவர் அப்படி நடிக்க முடியுமா என்றே எண்ணத் தோன்றுகிறது. திரெளபதியின் இசைத் திறனும் அபாரமான நடிப்பாற்றலும் பில்ஹணன் நாடகத்தின் தரத்தை பன்மடங்கு உயர்த்தின என்பதில் ஐயமில்லே.

பில்ஹணனைப் பிறவிக் குருடனாக எண்ணியிருக்கிறாள் யாமினி. பாடம் நடந்து கொண்டிருக்கிறது. நேரம் போனதே இருவருக்கும் தெரியவில்லை. அன்று பெளர்ணமி; முழு நிலவு தோன்றுகிறது. கவிஞனின் உள்ளம் துள்ளுகிறது. கவிதை ஊற் றெடுக்கப் பாடுகிறான் பில்ஹணன். இந்தக் கட்டத்தில் புரட்சிக் கவிஞரின் பாடலை அப்படியே சேர்த்துக் கொண்டேன்.

தேன் சொட்டும் கவிதை

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
கோலமுழு தும்காட்டி விட்டால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ? நீதான்
சொக்கவெள்ளிப் பாற்குடமோ? அமுத ஊற்றோ?
காலைவந்த செம்பளிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ?

பாவேந்தரின் தேன் சொட்டும் உவமை நயம் செறிந்த இந்தக் கவிதையினை பியாகு ராகத்தில் பாடிவிட்டு, மதுரகவி பாஸ்கர தாசரின் “அமுத பூரணக் கலையின் மதி” என்னும் பாடலை அத்தோடு இணைத்துப் பாடி உச்சஸ் தாயையில் நிறுத்துவதும், முழு நிலவு தோன்றுவதும், இளவரசி யாமினி பிறவிக் குருடனை கவிஞன் நிலவை எப்படிப் பார்த்தான் என்று வியப்புணர்ச்சியை