பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


சாமியைப் பார்த்ததும் நான் முதலிலேயே பயந்துவிட்டேன். அப்புறம் அவர் கோபத்தோடு சூலத்தை நீட்டிக் கொண்டு என்னை நெருங்கியதும் ஏதோ செய்யப் போகிருரென்று அஞ்சி உள்ளே ஒடி விட்டேன். தேம்பித் தேம்பி அழவாரம்பித்தேன். சுவாமிகள் என்னைச் சமாதானப்படுத்தினார். எமனைக் கூப்பிட்டு, என் பக்கத்தில் நிறுத்தினார், அவருடைய தலையிலிருந்த தகரக் கிரீடத்தையும் ‘டோப்பா’ வையும் மூக்கில் போட்டிருந்த நீல வலைக் கண்ணாடியையும் கழற்றச் செய்தார். “நம்ம கந்தனடா இவன்: நன்றாய்ப் பார். எமனில்லை! அதெல்லாம் வெறும் நடிப்பு!...பயப்படாதே!” என்று தட்டிக் கொடுத்தார், அந்த எமக் கந்தசாமி யும் என்னோடு சிரித்துக் கொண்டே பேசினார். ஒருவாறு பயம் நீங்கியது.

மீண்டும் திரை தூக்கப்பட்டது. காட்சியை விட்ட இடத் திலிருந்து தொடங்கினார் கந்தசாமி, எட்டி நில்லும் நாரதரே’ என்ற பாடலைப் பாடினார். அப்போதும் நான் சற்று நடுங்கிக் கொண்டிருந்தேன். எமன் பேசி முடித்ததும், “கச்சை கட்டிக் கொண்டு, நானே உன் கைவரிசையைப் பார்க்கிறேன்” என்று பாட ஆரம்பித்தேன். அவ்வளவுதான். சபையில் ஒரே கை தட்டல்; சிரிப்பு. நாரதர் பயந்து ஓடிப்போனதைப் பார்த்த சபையோ, இப்போது கைவரிசையைப் பார்க்கிறேன்’ என்றால் வேறு என்ன செய்வார்கள்? எப்படியோ நடுக்கத்துடன் பாடி முடித்து உள்ளே வந்து சேர்ந்தேன்.

அந்த முதல் நாடகத்தில் நான் பயந்தோடிய சம்பவம் இன்னும் பசுமையாக என் நினைவில் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.

கம்பெனியின் உரிமையாளர்கள்

இந்தச் சந்தர்ப்பத்தில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையைப் பற்றியும், தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி யும் சில செய்திகள் குறிப்பிடுவது அவசியமெனக் கருதுகிறேன்.

நாடக சபைக்கு உரிமையாளர்கள் நால்வர். திருவாளர்கள் சின்னையாபிள்ளை, பழனியாபிள்ளை, கருப்பையாபிள்ளை, சுப்ரமணிய