பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாகவதரின் கலைக் குடும்பம்


காரைக்குடி வைரம் அருணசலம் செட்டியாரின் தியேட்டரில் 5.5.44-இல் சிவலீலா தொடங்கியது. தியேட்டரில் நாடகம் நடத்துவதற்கு லைசென்ஸ் கொடுக்க நகர சுகாதார அதிகாரி ஏதோ தகராறு செய்தார். அவரைச் சரிபடுத்தி லைசென்ஸ் வாங்குவதற்குள் 14 நாட்கள் ஓடிவிட்டன. ஏப்ரல் 21ம் தேதி காரைக்குடிக்கு வந்தோம். மே 5-ம் தேதிதான் நாடகத்திகுரிய லைசென்ஸ் கிடைத்தது.

சிவலீலா தொடர்ந்து நல்ல வசூலில் நடைபெற்றது. சூல மங்கலம் பாகவதரின் பிள்ளைகளான டாக்டர் மீனாட்சி சுந்தரமும் சங்கீத பூஷணம் ராதாகிருஷ்ணனும் திருமயத்தில் இருந்தார்கள். டாக்டர் மீனாட்சி சுந்தரம் சிறந்த ரசிகர். அவருடைய மனைவி கற்பகம் அம்மையார் அவரைவிடப் பிரமாத ரசிகை. கணவனும் மனைவியும் குழந்தைகளோடு இரண்டு நாளைக்கு ஒரு முறை சிவ லீலா பார்க்க வருவார்கள். வரும்போதெல்லாம் எங்களுக்குச் சாப்பிட ஏதாவது கொண்டு வருவார்கள். பலகாரங்களைச் சுவை யோடு தயாரிப்பதில் கற்பகம்மாளுக்கு நிகர் அவரேதான். கொண்டுவரும் காபிக்காகவும், கோதுமை அல்வாவுக்காகவும் எங்கள் சிவதாணுவும், பிரண்டு ராமசாமியும் காத்துக் கிடப்பார் கள். கற்பகம்மாளின் அன்புக்கும் ஆர்வத்துக்கும் ஈடு இணை சொல்ல முடியாது. நல்ல சங்கீதக் குடும்பம் அது. டாக்டரும் அவர் துணைவியும் பேசிக் கொள்வதைக் கேட்பதற்கே சுவையாக இருக்கும் டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஏதாவது சொல்லுவார்; உடனே கற்பகம் அம்மையார் “பாத்தேளோ! இப்படித்தான் இவர் சதா ஏதானும் உளறிண்டிருப்பார். இவாளுக்கெல்லாம் என்ன தெரியும்? எல்லாம் பெரியவாள் போட்ட பிச்சை, ஏதோ அந்தக் குடும்பத்தில் வந்து, அவர் புள்ளையாப் பொறந்த