பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

479


நாடகப்பரிசு என்று ஏன் ஒருவரும் நடத்தவில்லை? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இரண்டு மூன்று நாட்கள் இதைப் பற்றி நன்கு சிந்தித்தேன். ஏன்?நாமே ஒரு போட்டி நடத்தினுலென்ன? என்று தோன்றியது. பெரியண்ணா சின்னண்ணா இருவரிடமும் கலந்து யோசித்தேன். 1000 ரூபாய்கள் பரிசுக்காக ஒதுக்கலா மென்று பெரியண்ணா கூறினார். மறுநாளே அதற்கான ஒரு பெரியதிட்டம் வகுத்தோம். பரிசுக்குரிய நாடகங்களைத் தேர்ந் தெடுப்பதற்கு நீதிபதிகளாக யாரைப்போடலாம் என்றவிவாதம் எழுந்தது. இந்தப் பிரச்சினைகளைப்பற்றி திருச்சியிலுள்ள எழுத் தாள நண்பர்கள் சிலருடன் கலந்து ஆலோசித்தோம். எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு மனப்பட்ட கருத்து உருவாகவில்லை. ஒருவருக்குப் பிடித்த நீதிபதி மற்றொரு எழுத்தாளருக்குப் பிடிக்க வில்லை. எங்களுடைய நடுநிலை உணர்வில் எனக்கு நம்பிக்கை யிருந்தது. எல்லோரிடமும் நன்கு விவாதித்த பின் கடைசியாக நாங்களே நீதிபதிகளாக இருந்து நாடகங்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம். 1-12-44ல் தமிழ் நாடகப்பரிசு என்ற துண்டுப் பிரசுரத்தின் மூலம் எங்கள் திட்டத்தைப் பத்திரிகைகளுக்கு அறி வித்தோம். போட்டிப் பரிசு என்னும் சொல்லை இந்தத் திட்டத்தில் பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான் ‘தமிழ் நாடகப் பரிசு’ என்று அறிவித்தோம். நாங்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பிய பிரசுரம் இதுதான்.

தமிழ் நாடகப் பரிசு
ரூ. 1000

தமிழ் நாடகக் கலை வளர்ச்சியில் நாட்டங் கொண்ட எழுத்தாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

1. தமிழ் நாட்டின் முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு தமிழர்களின் இன்றைய சமூக வாழ்க்கையையோ, பழந்தமிழ் மன்னார்களின் சரித்திரத்தையோ அடிப்படையாக வைத்துக் கற்பனையாக எழுதவேண்டும்.

2. மொழிப்பெயர்ப்போ, தழுவலோ கூடாது.