பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

482


யிலும், வார இதழிலும், எங்கள் முடிவை விளம்பரமாகவும் கொடுத்தோம். நடுநிலையுணர்வோடு நாங்கள் அளித்த தீர்ப்பு இது.

தமிழ் நாடகப் பரிசு ரூ 1000

முடிவு விவரம்

இப்பரிசுத் திட்டத்தில் கலந்துகொண்டு நாடக மெழுத முன் வந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு நிறைந்த வணக்கங்கள்.

முதற் பரிசு ரூ. 600       இரண்டாவது பரிசு ரூ. 400 
அவள் விபசாரியா?       இராஜராஜசோழன் 
சமூக நாடகம்            சரித்திர நாடகம்

ல. சேதுராமன், அரவங்குறிச்சி அரு. இராமநாதன், கண்டனூர்

நடிப்பதற்கேற்றவை யென்று கருதி ஆசிரியரின் அனுமதி பெற்ற நாடகங்கள்.

புயல் (சமூக நாட்கம்)    வீரப்பெண் (சரித்திரநாடகம்)
‘அகிலன்’                  பி. எக்ஸ். ரங்கசாமி பி. ஏ.
                            பாளையங்கோட்டை

இப்பரிசுத் திட்டம் 1. 12. 44ல் வெளியிடப்பட்டது.

290 எழுத்தாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்புகள் அனுப்பப்பட்டன.

குறித்தபடி 1- 6. 45 வரை வந்த நாடகங்களின் மொத்த எண்ணிக்கை-59.

பரிசுத் தொகை 1- 9. 45ல் அனுப்பி வைக்கப்பட்டது.

இதர நாடகங்கள், குறித்த விலாசப்படி திருப்பியனுப்பி வைக்கப்படும்.

எங்களுடைய இம்முயற்சியை வரவேற்று ஆசி கூறிய அன்பர்களுக்கும் குறிப்புகள் வரைந்த பத்திரிக்கைகளுக்கும் இதய பூர்வமான நன்றி.

டி. கே. எஸ். சகோதரர்கள்

உரிமையாளர்கள் ஸ்ரீபாலஷண்முகானந்தசபா

1. 9. 45. முகாம். திருச்சி