பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

505


பாக நடத்தியவர். இலங்கைக்கும் சென்று பெரும்புகழ் பெற்றவர். திரு. டி. எஸ். துரைராஜ்,எம். ஆர். சாமிநாதன் சி.வி. முத்தப்பா, சபாபதி முதலிய எத்தனையோ நடிகர்கள் அந்தக்குழுவிலிருந்து பெருமைப் பெற்றார்கள். அந்தப் பெரியவர், கம்பெனி யெல்லாம் கலைந்துவிட்ட நிலையில் தன்னந்தனியாக வந்திருந்தார். அவருக்கு உதவ வேண்டியது எங்கள் கடமையென்பதை உணர்ந்தோம். 5-3-45இல் நடந்த குமாஸ்தாவின் பெண் நாடகத்தின் வசூல் முழுவதையும் அவருக்குக் காணிக்கையாக மேடையிலேயே அளித்தோம்.

கவியின் கனவு

23-4-45இல் ஸ்ரீசக்திநாடக சபாவின்கவியின் கனவு நாடகம் பார்ப்பதற்காக நாகப்படடினம் சென்றிருந்தேன். திரு. சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் பெரு முயற்சியால் அந்த நாடக சபை புதிதாக உருவாயிருந்தது. காட்சிகளையெல்லாம் புதிய முறையில் அமைத்திருந்தார்கள். கவியின் கனவு ஒரு புரட்சிக்கரமானதேசிய சரித்திர நாடகம். இந்நாடகத்தை எழுதியவர் இப்போது சங்கீத நாடக சங்கத்தின் செயலாளராகப் பணி புரிந்துவரும் கவிஞர் கலைமாமணி எஸ்.டி.சுந்தரம் அவர்கள், மக்களுககு எழுச்சியும் உணர்ச்சியும் ஊட்டத்தக்க முறையில் நாடகத்தின் உரையாடல்கள் அமைந்திருந்தன. பாலக்காட்டில் எங்களை விட்டுப் பிரிந்த எஸ். வி. சுப்பையா அவர்களை மீண்டும் அந்த மேடையிலேதான் நான் பார்த்தேன். நாடகத்தில் அவர் புரட்சிக் கவிஞனாகவந்து அற்புதமாக நடித்தார். திரு. எம். என். நம்பியார் சர்வாதிகாரியாக நடித்தார். அவருடைய திறமையான நடிப்பு, வட இந்தியத் திரைப்பட நடிகர் சந்திரமோகனை நினைவூட்டியது. நாடகத்தை நான் மிகவும் ரசித்தேன்.

நாடகம் முடிந்ததும் திரு. எஸ். டி. சுந்தரம், திரு. சக்தி கிருஷ்ணசாமி இருவரையும் மனமாரப் பாராட்டினேன். நண்பர் எஸ். வி. சுப்பையாவுக்கு வாழ்த்துக் கூறினேன். மறுநாள் நாகையிலேயே தங்கி, அவர்கள் கம்பெனி வீட்டிலேயே விருந்துண்டு 24- 4. 45இல் திருவாரூர் வந்தேன். அங்கு காரைக்குடி ஸ்ரீராம பாலகான சபையாரின் எதிர்பார்த்தது என்னும் சமூக நாடகம் பார்த்தேன். இந்நாடகம் திரு. நா. சோமசுந்தரம் அவர்களால்