பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

520


மதுர பாஸ்கரதாஸுடன் இரண்டு நாட்கள் இருந்து பாடல்கள் பற்றி விவாதித்து விட்டு 19 ஆம் தேதி பாலக்காடு சேர்ந்தேன்.

கடினமான உழைப்பு

பில்ஹணன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததால் பகலில் கோவையிலும் இரவில் பாலக்காட்டிலுமாக நாள் முழுதும் உழைக்க நேர்ந்தது. என்னதான் உள்ளத்தில் உற்சாக மிருந்தாலும் இந்தக் கடினமான உழைப்பை உடல் தாங்க வில்லை. மாலை 5 மணி வரை கோவையில் படப்பிடிப்பு. அதற்கு மேல் காரில் புறப்பட்டுப் பாலக்காடு வருவேன். நாடகத்தில் உழைப்பேன். நாடகம் முடிந்ததும் உடனே புறப்பட்டுக் கோவை சென்று படுத்துறங்குவேன். காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து படப்பிடிப்புக்கு ஆயத்தமாக வேண்டும். ஒளவையார் நாடகம் தொடங்கிய பின் உண்மையிலேயே நான் மிகவும் சோர்ந்து விட்டேன். பகல் முழுதும் படப்பிடிப்பில் இருந்து விட்டு இரவில் ஒளவையாராக நடிப்பது என் சக்திக்கு மீறிய உழைப்பாக இருந்தது. என் சிரமத்தை நான் வெளியே சொல்லவில்லை என்றாலும் தொண்டைக் கட்டிக் கொண்டது. உடல் நலமும் குன்றிய தால் 26. 1. 47 இல் எங்கள் நண்பர்களான பாலக்காடு டாக்டர்கள் ராகவன், சிவதாஸ் இருவரிடமும் உடலைப் பரிசோதித்துக் கொண்டேன். இரண்டு நாள் நன்கு சோதித்த பின் மூன்று மாதங்கள் கட்டாயம் ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், இரவில் 10 மணிக்கு மேல் கண்விழிக்கக் கூடாதென்றும், இப்படியே தொடர்ந்து உழைத்தால் 40 வயதுக்கு மேல் நரம்புத் தளர்ச்சி ஏற்படுமென்றும் கூறினார் டாக்டர் ராகவன். அன்றைய நிலையில் நான் ஒய்வு பெறுவது எப்படி? டாக்டரிடம் நிலைமையை எடுத்துக் கூறினேன். ஒய்வு பெறுவதைத் தவிர வேறு ஏதாவது வழி சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். பிறகு டாக்டர் ராகவனும் சிவதாஸு கலந்து யோசித்தார்கள். நிலைமை அவர்களுக்கே தெரியுமாதலால் அதற்கேற்றபடி எனக்கு மருந்துகள் எழுதிக் கொடுத்தார்கள். அவர்கள் யோசனைப்படி தினந்தோறும் ஊசிபோட்டுக் கொள்ளவும், குறிப்பிட்ட சில மருந்துகளைக் காலை மாலை இரு வேளைகளிலும் தொடர்ந்து சாப்பிட்டு வரவும் ஒப்புக்