பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

545


அண்ணாத்துரையென நம்மால் புகழப்படுகிறார். இதெல்லாம் எதைக் குறிக்கின்றது?... கட்டுரை, சிறுகதை, நாவல், எழுது வதைவிட நாடகம் எழுதுவ்து கஷ்டமானது என்பது மட்டுமல்ல: நாடகம் மக்களுக்கு அதிகப் பயனளிக்கக்கூடியது என்பதுதான் இதன் உண்மை.

அன்பர்களே, நாடகம் மட்டுமல்ல; பொதுவாக எந்தக் கலையை எடுத்துக்கொண்டாலும் அதன் குண தோஷங்களை ஆராய்ந்து பொதுமக்களுக்கு அறிவித்து, கலை வளர்ச்சிக்கு ஆதர வளிக்கும் பொறுப்பு இன்று பத்திரிகைகளிடம் இருக்கிறது. பத்திரிகைகள் நடுநிலையிலிருந்து விருப்பு வெறுப்பின்றி நன்மை தீமைகளை எடுத்துச் சொன்னல்தான் கதைகள் வளர்ச்சி பெறும்.

பகல் முழுவதும் உழைத்துவிட்டு அலுத்துப் போய் வரும். பாட்டாளிக்குச் சிலமணி நேரங்கள் சிரித்து மகிழ்வதுதான் இன்றையத் தேவையாயிருக்கலாம். வேடிக்கையாகப் பொழுது போக்க நாடகம்பார்க்க வருபவர்களுக்கு அரங்கத்திலும்அரசியல் பிரசாரம் செய்வது அவசியமில்லாததாகத் தோன்றலாம். மக்களின் உடனடித் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு அவர் களின் சிலமணி நேர மகிழ்ச்சிக்காக நாடகங்கள் நடைபெற்றால், போதாது.

மக்களின் வாழ்க்கைநிலை உயர, அவர்கள் நல்வாழ்வுவாழ, என்னதேவை? அவர்களுக்கு நாம் எதைச் சொல்லவேண்டும்? என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு கலைஞர்களிடம் இருக் கிறது. மக்களின் தேவையென்னவென்பதை அவர்களுக்கும். எடுத்துக்காட்டி கலைஞர்களுக்கும் எடுத்துக்காட்டி மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டும் கலைஞர்களே, கலைகளை, நாடகங்களைப் பாராட்டி ஆதரிக்கும்படிசெய்து, மக்களின் ரசனையை உயர்த்தும். பொறுப்பு, இன்று பத்திரிக்கைகளிடம் இருக்கிறது.

மக்களின் ரசனைக்குத் தக்கவாறு கலைகள் வளர்ந்தால் வளர்ச்சியில் வேகமிருக்காது. மக்கள் கீழே இருக்கிறார்கள் என்பதற்காக இலக்கியமும் கீழே இறங்கி விடாதபடி பத்திரிகைகள் கண்காணிக்க வேண்டும். மக்களுக்குப் புரிகிற பாஷையில் எழுதவேண்டும்; புரிகிற பாஷையில் பேசவேண்டும். புரிகிற பாஷை-புரிகிற பாஷை என்று உரையாடலின் தரத்தைக் குறைத்துக்கொண்டே போவோமானால் சின்னாட்களில் பாஷையே