பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

546


இராது. வேறு உருவத்தில் மாறிவிடும். குறிப்பிட்ட ஒரு நிகலயை நிர்ணயம் செய்துகொண்டு அந்த நிலைக்கு மக்களின் ரசனையை உயர்த்தவேண்டியது விமர்சகர்களின் கடமை. நாடகக்கலையால் மக்கள் திருந்தவேண்டும். மக்களின் ஆராய்ச்சி அறிவிகுல் நாடகக் கலை வளரவேண்டும்.

ஒருநாடகம் குறைந்தது ஒருமாத காலமாவது நடைபெறு கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் நாடகங்களைப் பார்க் கிறார்கள், நாடகப் பயன் மக்களைத் தவருன வழியிலும் திருப்ப லாம், நேரான வழியையும் காட்டலாம். இவ்வாறு மக்களைப் பாதிக்கும் ஒரு அறிய கலையைக் கலைஞர்கள் தவருண பாதையில் கொண்டு செல்லாமல் தடுப்பதும், கண்டிப்பதும், நேரான வழி காட்ட முயன்று ஆதரவு குறையுமானல் அவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பதும் பத்திரிகைகளின் கடமையல்லவா?... அலட்சிய மனோபாவம் காட்டி இதை புறக்கணிப்பது நாட்டுக்கு நலம் செய்வதாகுமாவென்று கேட்கிறேன். கண்மூடித்தனமான புகழுரைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாட்டுக்கு நன்மை பயப்பதாயின் பாராட்டுங்கள். சிறந்த அம்சங்களை எடுத்துக் காட்டி ஊக்கமளியுங்கள். தீமை செய்வதாயின் அதையும் எடுத்துக் காட்டித் திருத்துங்கள். நோக்கத்திலேயே பழுதிருந் தால் கண்டியுங்கள். குறை களைந்து தெளிவு பெறத்தக்க முறை யில் மக்களின் அறிவை வளர்த்து அவர்கள் ஆதரவு காட்டும்படி விமர்சனம் செய்யுங்கள் என்றுதான் வேண்டுகிறேன்.

விமர்சனங்களில் நேர்மையிருந்தால்தான் மக்களின்ரளிகத் தன்மை வளரும். மக்களின் ரஸிகத் தன்மை வளர்ந்தால் தான் கலைகள் பூரண வளர்ச்சி பெறும்.

கலைகள் இன்று தொழிலாகத்தானிருந்து வருகின்றன. சர்க்கார் கலைஞர்களை வளர்க்கவில்லை...... கலைஞர்கள் தங்கள் பிழைப்புக்கும் இதிலிருந்துதான் வழி தேடவேண்டும். ஆதலால் பொதுமக்கள் ரசனையைப் புறக்கணிப்பது சாத்தியமில்லை.

நாடகக் கம்பெனிகளின் இன்றையநிலையையும், அவற்றின் நிர்வாகக் கஷ்டத்தையும் அத்துறையிலீடுபட்ட ஒரு சிலர்தான் உணரமுடியும். யுத்தகால வருவாய் இன்றில்லை. சிலமாதங்களாக எல்லா நாடகக் கம்பெனிகளுக்குமே வருவாய் குறைந்துவிட்டது. ஆனால், செலவினங்கள் சிறிதும் குறையவில்லை...... ஆனாலும்