பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


இதைப்பற்றி முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். நான் சின்னப் பையனாக இருந்ததால் மேடைக்கு வந்தவுடனேயே ஜனங்கள் கைதட்டி வரவேற்பது வழக்கம். சபையோர் மந்த மாக உட்கார்ந்திருப்பதைக் கண்ட சங்கரதாஸ் சுவாமிகள்,

“எல்லாம் சண்முகம் பயல் மேடைக்குப் போனவுடன் சரியாய்ப் போய்விடும்.”

என்று கூறியது என் காதில் விழுந்தது. நாரதர் வர வேண்டிய காட்சியும் வந்தது. “சங்கீத சுகமே பெரிய சுகம்” என்று பாடிக்கொண்டு நான் அரங்கில் பிரவேசித்தேன். வழக்கம் போல் பெருத்த கரகோஷத்தை எதிர்பார்த்த எனக்குப் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. சபையில் முழு அமைதி நிலவியது. தூரத்தில் கற்றாழைப் புதர்கள்; குறைவான வெளிச்சம், எதிரே பயங்கரமான அமைதி. எனக்கு என்னமோ போலிருந்தது. திறந்த வெளியில் நடிப்பது எனக்குப் புதிய அனுபவம். அவையோரின் மரண அமைதி எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. முகத்தில் சோகச்சுவை ததும்ப, நான் உள்ளே வந்து சேர்ந்தேன்.

எமதருமன் தோன்ற வேண்டிய காட்சி வந்தது. சிந்தனை யிலேயே உட்புறம் உலாவிக் கொண்டிருந்த சுவாமிகள், எம தருமனக வேடம் புனேந்திருந்த கந்தசாமியிடம் போய் ஏதோ காதில் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே எமதருமன் காலில் ‘சலங்கை’ கட்டப் பெற்றது. காட்சி தொடங்கியது.

எமதருமன் ஆட்டம்

“விண்டலமும் மண்டலமும் எண்டிசை யடங்களுக் விளங்கும் கீதி மார்க்கம் அடுப்பேன்”

என்று தொடங்கும் பாடலே முழக்கிக் கொண்டு எமன் கந்தசாமி மேடைக்கு வந்தார். வழக்கத்திற்கு மாருகக் கையிலிருந்த குலா யுதத்தைச் சுழற்றிக் கொண்டு. ‘தை தக்க தை தக்க தை’ என்று குதித்துக் கொண்டு, ‘ஜல் ஜல்’ எனச் சலங்கைகள் ஒலி செய்ய, அரங்கம் முழுவதும் ஆட்டம் போடத் தொடங்கினார்.

சபையில் ஒரே கரகோஷம்! அமைதியாயிருந்த சபையில் ஆரவாரம்!! பலே பலே என்ற சத்தம் !!!