பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


ஜித்து சிறையெடுத்துப் போவதாகத்தான் கதை. சுவாமிகளும் அப்படியேதான் மற்றவர்களுக்கு, சுலோசன சதி நாடகத்தை எழுதிக் கொடுத்திருந்தார். ஆனால் பெரியண்ணாவின் பேச்சுத் திறமையைக் கண்டு மகிழ்ந்த சுவாமிகள், சிறையெடுத்துப் போவதை மாற்றி, சுலோசனை தானுக மனமிசைந்து இந்திரஜித்துவுடன் செல்லுவதாகக் கதையை அமைத்துக் கொண்டார். இதற்காக இந்திரஜித்துவுக்கு ஒரு நீண்ட வசனம் எழுதினார். இந்த வசனத்தைப் பேசி முடிக்கச் சுமார் பத்து நிமிடங்கள் ஆகும். இந்த வசனத்தில் தமிழின் சிறப்பும், தமிழர்களின் திருமண வாழ்க்கை பற்றிய செய்திகளும் விரிவாக இடம் பெற்றிருந்தன. ஒரு மங்கை தன் மனத்திற் கிசைந்த ஆடவனோடு தனித்துச் செல்வது தவருகாது என்பதை இந்திரஜித்து சுலோசனைக்கு விளக்கமாக எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ள வசனம் இது. இந்த வசனத்தை அந்த நாளில் பெரியண்ணா பேசி முடித்ததும் சபையோர் மகிழ்வோடு கைதட்டிப் பாராட்டு வார்கள். ‘தமிழ் வசனம்’ என்றே நாங்கள் இதைக் குறிப்பது வழக்கம்.

இன்னும் சீமந்தனியிலே அவலோகன்: பவளக்கொடியில் அருச்சுனன்; பிரகலாதாவில் இந்திரன்; அபிமன்யு சுந்தரியில் துரியோதனன் ஆகிய வேடங்களில் அண்ணா நடித்து வந்தார். இடைக் காலத்தில் 1924-இல் இவர் நடிப்பைக் கைவிட்டுக் கம்பெனியில் கணக்கு வேலைகளைப் பார்த்து வந்தார். பிறகு நாங்கள் இசாந்தக் கம்பெனி துவக்கியபோது மீண்டும் நடிப்புத் துறைக்கு வந்து விட்டார்.

கதாநாயகி சிங்காரவேலு

சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் முன் சாவித்திரியாக நடித்தவர் திரு சிங்காரவேலு. இவர் தம்முடைய பெயருக்கு ஏற்ற படி சிங்கார பாகங்களில் மிகத் திறமையாக நடிப்பார். அந்தநாளில் முன், பின் என்று ஒரே பாத்திரத்தை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொடுப்பது வழக்கம். அநேகமாகக் காதல் காட்சிகளெல்லாம் இவருக்கே கொடுப்பார்கள். சுலோசன சதியிலும் இவர் முன் சுலோசனையாக நடிப்பார். பவளக்கொடி,