பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


போட்டுக் கொண்டிருந்தார். கவனித்தேன். அம்மா, காலையில் கோபி போடுவதற்குக் ‘கருப்பட்டி’ இல்லையென்று சொல்லி யிருக்கிறார்கள். அதுதான் சண்டைக்குரிய விஷயம்.

ஆம்; அந்த நாளில் நாங்கள் கருப்பட்டிக் காபி தான் சாப்பிடுவது வழக்கம். இப்போதுகூட எங்கள் நாகர்கோவிலுக்குப் போகும் நேரங்களில் வீட்டில் என் அண்ணியாரிடம் கருப்பட்டிக் கோபி போடச் சொல்லுவேன். அந்தக் ‘காபி'யில் எனக்கு ஒரு தனி ஆசை.

“பொழுது விடிந்து, காபி குடிக்க வேண்டிய நேரத்தில் தான கருப்பட்டி இல்லையென்று சொல்வது?” இது அப்பாவின் கேள்வி.

“இன்று ‘காபி’ வேண்டியதில்லை. தண்ணீர் குடித்தால் போதும். மற்ற காரியங்களைப் பார்” என்று தந்தையார் இறுதியாக முடிவு கூறி விட்டார். அவரும் பல் துலக்கத் தொடங்கினார்.

வெளியே யாரோ வருவதுபோல் சத்தம் கேட்டது. நாங்கள் எட்டிப் பார்த்தோம். கையில் ஒரு பெரிய கருப்பட்டிப் பொட்டலத்தோடு சிரித்துக் கொண்டே நின்றார் சிவகங்கை நாடக இரசிகர். எங்களுக்கு வியப்பாகப் போய்விட்டது. இவர் எப்படித் திடீரென்று கருப்பட்டியோடு வந்தார்...?

நாடக இரசிகர் எங்கள் பிரிவைத் தாங்காது அடுத்த வண்டியிலேயே பரமக்குடிக்குப் புறப்பட்டு விட்டார். காலையில் எங்கள் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்திருக்கிரு.ர். உள்ளே அம்மாவும் அப்பாவும் கருப்பட்டிக்காகச் சண்டை போட்டுக் கொண்டது அவர் காதில் விழுந்திருக்கிறது. உடனே அவசரமாக ஒடிப் போய், பக்கத்திலுள்ள கடையிலிருந்து கருப்பட்டியை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்த விபரத்தை அறிந்ததும் தந்தையாருக்கு இவரிடம் மிகுந்த அனுதாபம் ஏற்பட்டது. அவரையும் தம்மோடு பலகாரம் சாப்பிடச் சொன்னார். பிறகு நாடகப் பைத்தியத்தால் ஏற்படும் தீமைகளைப் பற்றியெல்லாம் அவருக்கு விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறினார். அவரை ஒருவாறு சமாதானப்