பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


பரமக்குடி நாடகம் முடிந்து திண்டுக்கல்லில் ஒரு மாத காலம் நாடகங்கள் நடத்திவிட்டு மீண்டும் மதுரை வந்து சேர்த்தோம். மதுரையில் சில நாடகங்கள் நடைபெற்றன.

திங்கட்கிழமை பஜனை

கம்பெனியில் திங்கட்கிழமைதோறும் பஜனை நடைபெறுவது வழக்கம், நடிகர்கள் எல்லோரும் கூட்டமாகச் சுவாமிகளின் பாடல்களைப் பாடுவோம். கடைசியில் தனித்தனியாக ஒவ்வொரு நடிகரும் பாடவேண்டும் கூட்டத்தில் கோவிந்தா போடும் சிலர், தனியாகப் பாடும்போது குளறி வழிவார்கள். இவர்களையெல்லாம் சட்டாம்பிள்ளை குறித்துக் கொள்வார். பின்னல் சுவாமிகள் கவனித்துக் கொள்வார்கள். எனவே பாடும் ஒவ்வொருவரும் பய பக்தியோடு பாடுவார்கள். மதுரையில் ஒரு நாள் புட்டுத்தோப்பிலுள்ள கம்பெனி வீட்டில் பஜனை வழக்கம் போல் நடந்தது. சித்திரைத் திருவிழா நடைபெறும் சமயம் அது. இரவோடிரவாக, சொக்கேசப் பெருமான் ஊர்வலம் புறப்பட்டு புட்டுத்தோப்புக்கு வருகிற நாள். பஜனையில் நாங்கள் எல்லோரும் பாடிமுடித்து விட்டோம். பஜனைக்கு வந்திருந்த நண்பர்களிலும் சிலர் பாடினார்கள். கடைசியாகச் சுவாமிகள் பாட வேண்டுமென எல்லோரும் வற்புறுத்தினார்கள் சுவாமிகள் சிறிது சிந்தித்தார்கள். குறுநகையோடு, “எவ்வளவு நேரம்பாட வேண்டும்?” என்று கேட்டார்கள். “தங்கள் மனம்போல் பாடுங்கள்” என்றார் ஒருவர். சுவாமிகளின் புலமையை நன்கறிந்தவரான பழனியாயிள்ளை, “சுவாமி ஊர்வலம் இங்கு வருகிற, வரை பாடுங்கள்” என்றார்.

“ஆண்ட சக்ரவர்த்தி” என்று திருப்புகழ்ச் சந்தத்தில் பாடத் தொடங்கினார் சுவாமிகள். கண்களை மூடிய வண்ணம் பாடிக்கொண்டேயிருந்தார், ஏற்கனவே நெட்டுருப் போட் டிருந்த பழைய பாடலன்று; அப்போதுதான் கற்பனையாக எழுந்த புதிய பாடல். எல்லோரும் வியப்பே வடிவாக வீற்றிருந்தனார். பாடல் முடியவில்லை. தொடர்ந்து பாடிக்கொண்டே பரவச நிலையிலிருந்தார் சுவாமிகள். நீண்டநேரத்திற்குப் பின் சுவாமி ஊர்வலம் வருவதை அறிவிக்கும் நாதசுர இன்னிசைக் கேட்டது. மேளச் சத்தம் தன் பாட்டுக்கு இடையூராக வந்த