பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


நிலையில் கண்களைத் திறந்தார் சுவாமிகள். பாடலை முடித்தார். சுமார் ஒரு மணி நேரம் சுவாமிகள் பாடியதாக எல்லோரும் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது. மதுரை நாடகங்களை முடித்துக் கொண்டு விருதுப்பட்டி, சாத்துார், திருநெல்வேலி முதலிய நகரங்களுக்குச் சென்றோம். வசூல் சுமாரான முறையில் இருந்து வந்தது.

ஒப்பந்த நாடகம்

தமது ஊராகிய தூத்துக்குடியில் நாடகம் நடத்த வேண்டு மென்று சுவாமிகள் திட்டமிட்டார். திருநெல்வேலியிலிருந்து துரத்துக்குடிக்குப் போனோம். துரத்துக்குடியில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தபோது பக்கத்தில் சுமார் இருபது மைல் தொலைவிலுள்ள ஏரல் என்னும் ஊரிலிருந்து கம்பெனியைக் ‘கண்ட்ராக்ட்’ பேச ஒருவர் வந்தார்.

அவர், மாதம் பதிமூன்று நாடகங்களுக்குச் சகல செலவுகளும் போக ஆயிரத்தி ஐநூறு ரூபாய்கள் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். இப்போதெல்லாம் ஒரு நாடகத்திற்கு 1500 ரூபாய்கள் கொடுத்தாலும் நாடகம் நடத்துவது கஷ்டமாயிருக்கிறது. அந்த நாளில் 13 நாடகங்களுக்கு 1500 ரூபாய்கள் என்றால், கால மாறுபாட்டை எண்ணிப் பாருங்கள். எல்லோரும் இரட்டை மாட்டு வண்டிகளில் பயணம் செய்து ஏரல் போய்ச் சேர்ந்தோம். ஏரலில் வீடு கிடைக்காததால் தாயார் மட்டும் தூத்துக்குடியிலேயே இருக்க நேர்ந்தது.

ஏரலில் நாடகக் கொட்டகைக்கு எதிரேயே ‘கள்ளுக்கடை’ இருந்தது. நாடகம் பார்த்துக் கொண்டிருப்பவர்களில் பலர் அடிக்கடி வெளியே சென்று வருவார்கள். ஒரு சிலர் மொந்தை யோடு உள்ளே வந்து உட்கார்த்து கொண்டு குடிப்பார்கள். இந்தக் கோலாகலத்தைக் கண்டு யாரும் அதிசயப்படுவதுமில்லை; தடுப்பதுமில்லை. நாடகங்கள் நல்ல வசூலில் தொடர்ந்து நடை பெற்று வந்தன.

தகராறும் குழப்பமும்

நாடகத்தைக் ‘கண்ட்ராக்டு’ எடுத்தவர் மிகுந்த புத்திசாலி. அவர் சுவாமிகளை எப்படியோ சரிப்படுத்திக்