பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


கொடுத்தார். அவ்விரண்டு தந்திகளும் தூத்துக்குடியிலிருந்து சுவாமிகளால் கொடுக்கப்பட்டிருந்தன. முதல் தந்தியில், “கண்ணாசாமிப் பிள்ளை கோஷ்டியாரை வைத்து இனிமேல் தொழில் நடத்த முடியாது. வேறு ஏற்பாடு செய்யவும்” என்று குறிப்பிட்டிருந்தது. இரண்டாவது தந்தியில்,

“கண்ணாசாமிப்பிள்ளை கோஷ்டியார் என்னிடம் சொல்லாமல் போய் விட்டார்கள். உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யவும்” என்று எழுதப்பட்டிருந்தது. மாறுபட்ட கருத்துடனிருந்த இவ்விரண்டு தந்திகளையும் படித்துவிட்டுத் தந்தையார் சிரித்தார்.

முதல் தந்தி கொடுத்தபோது நாங்கள் தூத்துக்குடியை விட்டுப் புறப்பட்டுப் போய்விட்ட செய்தி சுவாமிகளுக்குத் தெரியாது போலிருக்கிறது. அந்தத் தந்தியில் சுவாமிகளுக்கு எங்கள்மேல் இருந்த கோபம் தெரிகிறதல்லவா? சுவாமிகள் முடிவு செய்யுமுன்பே நாங்கள் புறப்பட்டுப் போய்விட்டோமென்று தெரிந்ததும், அந்தக்கோபம் ஒருவாறு தணிந்திருக்கிறது. இரண்டாவது தந்தியைக் கொடுத்திருக்கிறார். சின்னையாபிள்ளை தந்தையாருக்கு நீண்ட நேரம் சமாதானம் சொன்னார், கடைசி யாக மீண்டும் கம்பெனிக்குப் போகச் சம்மதித்து, தந்தையார் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

தந்தையார் வந்து அம்மாவிடம் இந்த விஷயங்களை யெல்லாம் சொன்னார். அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். சுவாமிகளோடு மன வேற்றுமைப் படுவதும், அதற்காகக் கம்பெனியிலிருந்து விலகுவதும் அம்மாவுக்குப் பிடிக்கவேயில்லை.

புதியம்புத்துார்

கம்பெனி புதியம்புத்துருக்குப் போயிருப்பதாகவும், அங்கு போய்ச் சேரவேண்டுமென்றும் சொல்லி, சின்னையாபிள்ளை எங்களை அனுப்பி வைத்தார்.

மணியாச்சிக்கும், துரத்துக்குடிக்குமிடையே ‘தட்டப் பாறை’ என்றொரு ஸ்டேஷன் இருக்கிறது. அந்த ஸ்டேஷனில் இறங்கி, மாட்டு வண்டியில் ஏறித்தான் புதியம்புத்துார் போக வேண்டும். நாங்கள் தந்தையாருடன், புதியம்புத்துார் வந்து சேர்ந்தோம்.