பக்கம்:எனது பூங்கா.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் கல்வி



சிலைகளைப்பற்றி பேசும்பொழுது இன்னுமோர் விஷயமும் ஞாபகத்திற்கு வருகிறது. நம்முடைய தமிழ்நாட்டுப் பெண்கள் நீண்டநாளாக அணிந்துவந்த முறை முற்றிலும் மாறிவிட்டது. அதனால் பாதகமில்லை. பழையன கழி யலாம், புதியன புகுதலாம். ஆனால் பழையமுறை தவறாக இருந்து புதியமுறை நல்லதாக இருந்தால்தானே? சற்று சிந்தித்துப் பார்த்தால் புதியமுறை நல்லதில்லை என்பது விளங்கும். புதியமுறையில் சீலையைக் கொய்து கொப்பூழுக்கு நேரே திணித்து வைத்து உடுத்துகிறார்கள். அங்கு தான் கர்ப்பப்பை இருக்கிறது. இவர்கள் பெருமடிப்பாகச் சுருட்டி அதன்மீது அழுத்தி உடுத்துவதால் அந்த உறுப்புக்கு தீமை உண்டாகுமல்லவா? இதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. சில வைத்திய நண்பர்களிடம் கூறினேன். அவர்களும் அதுசரிதான்!என்று கூறுகிறார்கள். யாரோ இந்த முறையில் அணிவதுதான் அழகு என்று கூறிவிட்டார்கள் நம்முடைய பெண்கள் அதை நம்பிவிட்டார்கள். அதுசரியா, தவறு என்று யாரும் எண்ணிப்பார்க்கக்காணோம். இதையும் வாசகர்கள் சிந்திக்குமாறு வேண்டுகிறேன்.

பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும் பொழுது நான் பார்க்கும் விஷயம் மற்றொன்றும் உண்டு. அனேகமாக கல்லூரி மாணவிகளுடைய மேலிதழில் அழகாக மீசை அரும்பியிருப்பதாகும். பெண்களுக்கும் மீசையிருப்பது அழகு தான் என்றால் நான் அதை ஆட்சேபிக்கமாட்டேன். ஆண்களுக்கு இருப்பதுபோல் பெண்களுக்கும்இருக்கட்டுமே என்று சொல்லிவிடுவேன். ஆனால் அந்தப் பெண்கள் கூட, பெண்களுக்கு மீசையா, அது கூடாது வேண்டாம் என்றே கூறுவார்கள். அப்படியானால் மீசை அரும்புவதற்கு அவர்கள் இடம் தருவானேன்? நம்முடைய தாய்மார்க்கு அரும்

—107—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/109&oldid=1392275" இலிருந்து மீள்விக்கப்பட்டது