பக்கம்:எனது பூங்கா.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் அதிர்ஷ்டம்



தார்கள். அவ்வாறு எனக்குக் கிடைத்த பாக்கியத்தை வாசகர்கட்குக் கூறவிரும்பியே இதை எழுதுகின்றேன்.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன் நான் பஸ்ஸில் பிரயாணம் செய்ய நேர்ந்தது. அப்பொழுது வண்டியில் கூட்டம் அதிகம். அநேகர் நெருக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தினிடையே நானும் ஏறினேன். அப்பொழுது அங்கு வீற்றிருந்த இரண்டு யுவதிகள் “ஆகா திருகூடசுந்தரம் வருகிருரே, அவருடைய பாத கமலங்கள் பஸ்ஸின் பலகையில் படலாமா? பட்டும் பட்டாடையும் விரிக்க வேண்டாமா" என்று எண்ணித் தங்கள் சீலைகளை நான் நின்று கொண்டிருப்பதற்காக விரித்து வைத்தார்கள். என்னே என் அதிர்ஷ்டம்! எலிசபெத் பெருமாட்டியின் அதிர்ஷ்டத்திலும் மேம்பட்டதன்றோ?

எலிசபெத் மகாராணியின் பாதம் பட்ட வெல்வெட் அங்கியை ராலேபிரபு என்ன செய்தார்? சலவை செய்தாரா அல்லது சேறு என்று எண்ணி உபயோகியாமல் எறிந்து விட்டாரா? அது ஒன்றும் நமக்குத் தெரியாது. ஆனால் இந்தப் பெண் ரத்னங்கள் திருகூடசுந்தரத்தின் பாததூளி பெரும் பாக்கியம் பெற்றதாயினவே அந்தப் பாததூளியை இழந்து விடலாமா என்று நினைத்து அவற்றைச் சலவை செய்ய மாட்டார்கள் என்பதும் அப்படியே மடித்துப் பெட்டியில் வைத்துக் கொள்வார்கள் என்பதும் நிச்சயம். இத்தகைய பாக்கியம் யாருக்கு வாய்க்கும்?

ஆயினும் எனக்கு ஒரு ஐயம். இவர்கள் என்பால் அன்புகொண்டு பட்டாடைகளை விரித்துப் பலகையில் புர

—110—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/112&oldid=1392312" இலிருந்து மீள்விக்கப்பட்டது