பக்கம்:எனது பூங்கா.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் அதிர்ஷ்டம்


 ளும்படி செய்திருந்தாலும் இவ்வாறு செய்வது சுகாதாரத்துக்கு முற்றிலும் முரண்பட்டதல்லவா என்பதே என் சந்தேகம்.

ஆனால் இந்த சுந்தரிகள் கல்லூரிமாணவிகள். வீட்டை விட்டு வெளியே செல்லாத பெண்களைவிட அறிவிற் சிறந்தவர்கள் என்று மதிக்கப் பெறுபவர்கள். அதனாலேயே பஸ்களில் போகிற ஆண்மக்கள் இத்தகையோரைக் கண்டு எழுந்து நின்று சேவகம் செய்கின்றனர். ஏனையோர் எத்துணை முதியோராயினும் ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் இருந்து விடுகின்றனர்.

இவ்வளவு அறிவு வாய்ந்த பெண்மணிகள் சுகாதாரக் கேடானதும் சாதாரண பாமர மக்கள் செய்ய அருவருப்பதுமான இந்தச் செயலைக் களிப்புடன் செய்ய வேண்டுமானால் அதற்குத் தக்க, பொருத்தமான, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, சுகாதாரத்தினும் உயர்ந்த ஒரு காரணம் இருக்கவேண்டும். என் சிறிய மூளைக்குக் காரணம் இருக்கவேண்டும் என்பதுமட்டும் எட்டுகின்றதேயன்றி அந்தக் காரணம் யாது என்பது அணுவளவு கூட புலப்படவில்லை.

ஆயினும் நான் என் மூளையைச் சும்மா விட்டுவிடச் சம்மதிக்கவில்லை. நீ காரணத்தைக் கண்டுபிடிக்கத்தான் வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்தேன். அது என்ன செய்யும்? சிறியதுதானே. ஆனாலும் அது முயன்று முயன்று இறுதியில் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்திருக்கிறது. அது சரியோ, தவறோ அறியேன். அதை வாசகர்கட்குச் சமர்ப்பிக்க மட்டும் செய்கின்றேன்.

—111—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/113&oldid=1392315" இலிருந்து மீள்விக்கப்பட்டது