பக்கம்:எனது பூங்கா.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் அதிர்ஷ்டம்


அந்த யுவதிகளுக்கு தங்கள் சீலைகள் பஸ்ஸின் பலகையில் சிறிதளவே தொட்டாலும் அநாகரிகச் செயலே என்பது தெரியும். ஆனால் அவர்கள் கால்கள் உள்ள நிலைமையில் அவர்களால் வேறு என்ன செய்ய இயலும்?

கம்பர் முதலிய கவிஞர்கள் அழகான பெண்களை அநேகமாகப் பாத முதற்கொண்டே வர்ணிப்பது வழக்கம். அதனால்தான் நம் நாட்டில் அத்தகைய வர்ணனையை "பாதாதிகேச வர்ணனை" என்று கூறுவரேயன்றி கேசாதி பாத வர்ணனை என்று கூறுவதில்லை. அப்படி அழகான பெண்களின்பாதம் அவ்வாறு எடுத்தவுடனேயே சிந்திக்கும்படியான அழகு சொட்டுவதாக இருக்குமாம். அதுமட்டுமன்று. அக்காலத்தில் பெண்கள் தம்பாதங்களை மறைத்து வைப்பதில்லை என்றும் அறிகின்றோம். சூர்ப்பநகை சீதையின் பாதங்களை இராவணனிடம் வர்ணித்துக்கூறுகிறாளே, சீதையும் இக்கல்லூரி யுவதிகள் செய்வதுபோல் பாதங்களை மறைத்து வைத்திருந்தால் சூர்ப்பநகை வர்ணிக்க முடியாதல்லவா?

சூர்ப்பநகை ராவணனிடம் வந்து சீதையைப் பற்றிக் கூறுகிறாள். அவள் யார் எத்தகையவள் என்று அவன் கேட்கிறான். அதற்கு சூர்ப்பநகை

தாமரை இருந்த தையலை
       சேடியாம் தரமு மல்லள்
யாமுரை வழங்கும் என்பது

       ஏழைமைப் பால தன்றோ?

—112—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/114&oldid=1392344" இலிருந்து மீள்விக்கப்பட்டது