பக்கம்:எனது பூங்கா.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் விரும்புவது எது? அரக்கனைத் தொலைக்க இயலவில்லை. அரச நீதி செய்ய முடியவில்லை. அந்தப் பெண்ணுக்கு அளித்து வந்த வாக்கு நிறைவேற்றப் பெறவில்லை. இப்பொழுது இவனி டம் உயிரையும் தானமாகப் பெற வேண்டியிருக்கிறதே. என் செய்வார் ? அவர் மனம் பட்ட பாடு ஆண்டவனே அறிவார். ஆனல் உயிர் யாருக்கும் இனியதோர் பொரு ளன்ருே ? அதல்ை அந்தத் துன்மார்க்கனுடைய நிபந்த னேயை ஏற்றுக் கொண்டார். சரி, போய்வாரும் என்று கூறிவிட்டு அவன் கோட்டைக்குள் போய்க் கதவை மூடி ன்ை. உடனே அரசருக்குப் பழைய பலம் எல்லாம் பறக் தோடி வந்து விட்டது. ஆனல் நிபந்தனையை நிறைவேற்று வது எப்படி? தாம் தீர்த்த யாத்திரை செய்ய விரும்புவதாக வும், ஒரு வருஷம் கழிந்ததும் வந்து சேர்வதாகவும் வழி யில் கண்ட ஒருவனிடம் கூறித் தம் ராணிக்குச் செய்தி அனுப்பிவிட்டு, அரக்கனுடைய கேள்விக்கு விடை தேட ஆரம்பித்தார். அதற்காக நாடெங்கும் அகலந்தார். வழி யில் கண்ட பெண்களிட மெல்லாம் அந்தக் கேள்வியைக் கேட்டார். அவர்கள் தத்தம் மனம் போல் பதில் கூறி வங் தார்கள். ஒருவர் ஆபரணம் என்ருர் அழகும் அறிவுமே காங்கள் வேண்டி நிற்பது' என்றனர் சிலர். சிலபேர், 'புத் திர சம்பத்தே எங்கள் லட்சியம் என்று கூறினர். இங்க னம் அவர்கள் விடைகள் பலவிதமாயிருந்தன, ஆர்தர் மன்னருக்கு உண்மையாகச் சரியான விடை. எது என்று புலகைவில்லை. வருஷமும் முடியப் போகின்றது. நாளே ஒரு நாளே மிச் சம். அரசர் என்ன செய்வார் ? இன்னும் விடை கண்டு பிடிக்கவில்லை. தம் வாக்குப்படி நாளே அரக்கனிடம் ---119 سن

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/121&oldid=759314" இலிருந்து மீள்விக்கப்பட்டது