இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எனது கார்
கூடிய, விமானங்கள் ஏழெட்டு உள. சில சமீபத்தில் - அதாவது லட்சக்கணக்கான மைல் தூரத்தில் - உள. சில வெகுதொலையில் - அதாவது கோடிக்கணக்கான மைல் களுக்கு அப்பால் - உள. இவை ஒன்ரறோடொன்று ஒரு நாளும் மோதிக்கொள்ளா.
இந்தவிதமாக என் விசேஷ விமானத்தின் மேன்மை களைப்பற்றி விரிவாக எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் அப்படிச்செய்து வாசகரின் ஆச்சரிய உணர்ச்சியைத் தணித்துவிட விரும்பவில்லை. அதனால், இந்த விமானம் எனக்கும் என் சந்ததியார்க்கும் மட்டும் சொந்தமானதன்று. உங்களுக்கும் உங்கள் சந்ததியார்க்கும் சொந்தமானது என்று கூறினால் போதும்.
–0–
-21-