பக்கம்:எனது பூங்கா.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது தோழன்

டாகிவிட்டதாக உணர்ந்து வருந்துவர் ; காதலர்க்குள் நீ நான், உனது எனது என்பதே கிடையாது’ என்று ஆங் கிலப் பேரறிஞர் எட்வர்ட் கார்ப்பெண்டர் காதலைப் பற்றி வர்ணிக்கிறார். அவர் கூறுவதை மறுக்க நான் விரும்ப வில்லை. காதலர் இருவரும் இரு வீணைகள். ஒரு வீணையின் பேரில் மெல்லிய காற்று வீசினாலும், உடனே அந்தச் சமயத்திலேயே மற்ற வீணையின் தந்தியும் அதே நாதத்தை வெளியிடும் என்று நம்பிக்கொள்வோம். ஆனால் இந்த விசேஷ வீணைகள் இவ்வுலகில் அபூர்வ சிருஷ்டிகள் என்பதை யாரும் ஒப்புக்கொள்வர்.

 எனது தோழனும் நானும் அவ்வித வீணைகள் என்று சந்தேகமறக் கூறுவேன். விஷயத்தை அறிந்த பின் ஒரு வரும் மறுக்கமாட்டார். நாங்கள் அபூர்வ சிருஷ்டிகள் அல்லர். எல்லோர்க்கும் தெரிந்தவர்களே. என்னிடம் முனிவு சிறிதே முளைக்கட்டும். உடனே என் தோழன் முகம் சுருங்கிக் கருகுவதைக் காணலாம். நான் சிறிதே வருந் தட்டும். உடனே என் தோழன் கண்களில் நீர் ததும்பி விடும். நான் அணுவளவு கவலை கொள்ளவேண்டியது தான். அந்த க்ஷணமே என் தோழனின் முகம் ஒளி மங்கி விடும். அவன் வயிறுகூடத் தன் ஜீரண வேலையை நிறுத்தி விடும். நான் அறிவை அபிவிருத்தி செய்தால், அடுத்தது காட்டும் பளிங்குபோல், என் தோழன் முகம் பொலிவு நிறைந்து தோன்றும். ஒருதுளி ஆனந்தம் என் உள்ளத்தில் விழட்டும்! உடனே என் தோழன் துள்ளிக் குதிப்பதை நீங்கள் காணலாம். மிகச் சிறிய என் எண்ணங்களும் இச்சைகளும் என் தோழனிடம் பிரதிபலித்துத் தோன்றுவ தால், என் தோழன் சாயல்களைக்கண்டே என்னை என் இதர நண்பர்கள் அறிந்து கொள்கிறார்கள்.

—-24—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/23&oldid=1299086" இலிருந்து மீள்விக்கப்பட்டது