பக்கம்:எனது பூங்கா.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி கற்பித்த கலை கற்றுக் கொடுப்பதில்லை. அந்தக்கலே சம்பந்தமான விஷயங் களே மட்டுமேதான் கற்றுக்கொடுக்கிருர்கள். அந்தவிஷயங் கள் உண்மையானவைதானு, ற் றுக்கொள்ளத் தகுங் தவையா என்று ஆராய்ந்து உண்மை காணக்கூடிய அறிவு தருவதுமில்லை. அந்த அறிவை உண்டாக்கிக்கொள்வதற் கான திறமையைத் தருவது மில்லே. இது நம் காட்டுப் பாடசாலைகளில் மட்டுமே என்று எண்ணவேண்டாம். சகல நாடுகளிலும் நடப்பது இதுவேதான். அதனுல்தான் பெர்ட் ரண்ட் ரஸ்ஸல் என்னும் பேரறிஞர், 'கல்வி அதிகாரி களுடைய நோக்கமெல்லாம் பல விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதே யன்றி அறிவை வளர்ப்பதோ, அறிவதறிந்து சுயமாக உண்மை காண்பதற்கான வழிகளைக் காண்பிப் பதோ அன்று " என்று கூறுகிருர். ' அரசாங்கத்தின் குறிக் கோள் மக்களிடம் தொழில்திறமை உண்டாக்குவதேயன்றி விரிந்த கோக்கு உண்டாக்குவதன்று ' என்றும் அவர் கூறுகிருர் அதனுல்தான் இலக்கியம் கற்பவரிடம் இலக்கியம் என்பது யாது, அதை எதற்காகக் கற்கவேண்டும், அது வாழ்வில் எந்த விதத்தில் பயன்படும் என்று கேட்டால் சரியான விடை கூறமாட்டார். அவர் இலக்கியம் கற்ப தெல்லாம் பரீட்சையில் தேறுவதற்காக மட்டுமே. அதன லேயே கல்வி கற்பவரில் பெரும்பாலோர் பட்டம் பெற்ற பின் தாங்கள் கற்ற இலக்கியங்களைக் கண்ணெடுத்துக் கூடப் பார்ப்பதில்லே. கண்னெடுத்துப் பார்ப்பவரும் இலக் கியம் என்பது எதற்காக ஏற்பட்டதோ அதற்காகப் பயன் படுத்தாமல் வேறு காரியங்களுக்கே பயன்படுத்துவர். திருக்குறள், கம்பராமாயணம் போன்ற தலே சிறந்த இலக் —66–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/66&oldid=759397" இலிருந்து மீள்விக்கப்பட்டது