பக்கம்:எனது பூங்கா.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது பூங்கா

ரிட்டு வழிபடுபவர்கள். பெரியோர்களுக்கு மாலையிட்டு வணங்குவார்கள். கலியாணம் செய்வதை மாலையிடுதல் என்று கூறுவார்கள். பெண்கள் தலையில் பூக்களைச் சூட்டிக்கொள்வார்கள். பெரியோர் பேசுவதைத் திருவாய் மலர்வதாகச் சொல்லுவார்கள். முகம் மலர்வதாகக் கூறுவர். பத்திரிக்கைகளுக்குக்கூட மலர்கள் என்றே நாம மிடுவார்கள்.

 உடலுக்குரிய உணவிலும் உள்ளத்துக்குரிய உணவே சிறந்தது என்று மகமது நபி கூறுகிறார். அதில் ஐயத்துக்கு இடம். ஏது?  "மனிதன் வயிற்றிலிடும் உணவினால் மட்டும் ஜீவிப்பதில்லை" என்று இயேசு கிறிஸ்துவும் கூறியிருக் கிறார் அல்லவா? மலர்கள் அத்தகைய உணவாகும். அவை அழகும் மணமும் பொருந்தியவை. அவற்றைப்போல் அழகும் மணமும் பொருந்திய வேறு பொருள்கள் கிடையா. "அழகுள்ள பொருள்கள் இடைவிடாமல் இன்பம் அளிக் கும் ஊற்றாகும்” என்று கீட்ஸ் என்னும் ஆங்கில மகாகவி கூறுகிறார். அவரை ஷேக்ஸ்பியருக்கு இணையாகக்கூடக் கூறுவார்கள். அவர் எத்தனையோ பாடல்கள் இயற்றிருப் பினும் இந்தப் பொருளுடைய வரியை அறியாத ஆங்கில மக்களும் ஆங்கிலம் படித்த மக்களும் கிடையார். இந்த உண்மையை அறிந்துதான் தமிழர்கள் மலர்களிடம் தங்கள் உள்ளத்தை அத்துணைக் கொள்ளை கொடுத்துளர். முருகு என்னும் அழகையே தங்கள் ஆதி தெய்வமாகக் கொண் டார்கள் அல்லவா?
 மலர்கள் அழகும் மணமும் பொருந்தியவை என்பது மட்டுமன்று. அவைதான் உலகத்தை நிலைபெறுத்திக்

-10-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/9&oldid=1298919" இலிருந்து மீள்விக்கப்பட்டது