பக்கம்:என்னுரை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சி.எம்.முக்கு உடம்பு சரியில்லை. இன்று விழாவுக்கு வரமாட்டார்." இந்தச் செய்தியைக் கலைஞரின் உதவியாளர் திரு சண்முகநாதன் சொல்லக் கேட்டதும் நான் அப்ஸெட் ஆனது போல் வேறு எப்போதும் ஆனதில்லை. கலைஞருக்கு உடனே ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன். "உடம்பு சரியில்லாத காரணத்தால் இன்று என் விழாவுக்கு வரமாட்டீர்கள் என்று கேள்விப்படுகிறேன். ஒரு பெரிய தலைவர் இப்படிச் செய்யலாமா? என்னை இப்படி ஒரு ஏமாற்றத்துக்குள்ளாக்கலாமா? நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் 104 டிகிரி காய்ச்சலி லும் உடம்பின் சோர்வைப் பொருட்பாடுத்தாமல் திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுக்குப் போய் தலைமை வகித்த நிகழ்ச்சியைத் தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அவ்வளவு காய்ச்சலோடு அவர் ஊர்வலத்திலும் கலந்து கொண்ட செய்தி தாங்கள் அறியாததல்லவே! இன்றைய வி ழாவில் நீங்கள் கலந்து கொள்வீர்கள் என்று நான் எவ்வளவு ஆவலாக உள்ளேன் என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு விளங்கும்" என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். அப்புறம் கலைஞரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. மாலை ஆறு மணிக்கெல்லாம் மண்டபத்துக்கு வந்துவிட்டார். விழாவில் கலந்துகொண்டு மிக அருமையான சொற்பொழிவு ஒன்றும் நிகழ்த்தினார். தமது பேச்சைத் தொடங்கும்போது நான் காலையில் 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/10&oldid=759572" இலிருந்து மீள்விக்கப்பட்டது