பக்கம்:என்னுரை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் ஆப்த நண்பர் எம்.கிருஷ்ணசாமி நின்று கொண்டிருக்கிறார். அவரை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன்.ஆபரேஷன் முடிந்து முதலில் நான் காண்பது அவரைத்தான். அவர் கையில் திருப்பதி பிரசாதம். புதன் கிழமைதான் எனக்கு ஆபரேஷன் என்று எண்ணிக் கொண்டு முதல் நாளே திருப்பதி சென்று எனக்காக பிரார்த்தனை செய்து பிரசாதம் கொண்டு வந்திருக்கிறார். இன்னொரு அதிசயம், அந்த இன்டென்ஸிவ் கேர் வார்டுக்குள் டாக்டர் அனுமதியில்லாமல் காற்று கூட நுழைய முடியாது என்ற நிலையில் நண்பர் எம்.கே. மட்டும் எப்படி வந்தார்? அவரை மட்டும் யார் அனுமதித்தது? அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம்! மறுநாள் மயக்கம் தெளிந்து கண் திறந்து பார்த்தபோது என் உடம்பின் பல்வேறு பகுதிகளில் டியூப்கள் பொருத்தப்பட்டு வி தவிதமான திரவபாட்டில்கள், வெவ்வேறு கருவிகளோடு, இணைக்கப் பட்டிருந்தன. என் மீது ஒரு மருத்துவ அவரைப் பந்தலே படர விட்டிருந்தார்கள். இரண்டு நாட்களுக்குப் பின் ஐ-ஸியிலிருந்து மீண்டும் என் அறைக்குக் கொண்டு போகப்படுகிறேன். அங்கே என் இரண்டு கால்களிலும், ஏதோ வலி இருப்பதை உணர்கிறேன். இதயத்தில் அல்லவா ஆபரேஷன்? கால்களில் ஏன் வலிக்கிறது? கால்களைப் பார்க்க வேண்டும் போல் ஓர் உந்துதல். பார்த்தால் இரண்டு கால்களிலும் கணுக்காலிலிருந்து முழங்கால் வரை கிட்டத்தட்ட ஒர் அடி நீளத்துக்கு 100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/100&oldid=759573" இலிருந்து மீள்விக்கப்பட்டது