பக்கம்:என்னுரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதியனுப்பிய கடிதத்தைக் குறிப்பிட்டதுடன் நிற்காமல் அதைப் படித்தும் காட்டினார். "நேதாஜியின் அன்றைய உடல்நிலையையும், எனது இன்றைய உடல் நிலையையும் ஒப்பிட்டு சாவி கோபமாகக் கடிதம் எழுதியிருக்கிறார். நேதாஜிக்கு அன்று வந்ததோ காய்ச்சல். இன்று எனக்கு வந்துள்ளதோ வயிற்றுக் கடுப்பு. ஒரே இடத்தில் தொடர்ந்து உட்கார்ந்திருக்க முடியாத நிலை. இருந்தும் ஏற்றுக்கொண்ட பணியை எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்கிற கொள்கை காரணமாக, கடமை உண்ர்வு காரணமாக வந்திருக்கிறேன். நான் முன்னெச்செரிக்கையாகச் சில மருந்துகளை உட்கொண்ட பிறகே இந்த விழாவுக்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறேன்" என்றார். நான் நெகிழ்ந்து போனேன். இன்று என்னைப் பலபேர் கேட்கிறார்கள் : "எப்படி இந்த வயதில் உங்களால் அயராமல் உழைக்க முடிகிறது?” சிரமமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஏற்றுக் கொண்ட பொறுப்பைச் செய்து முடிக்க வேண்டும், எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வோடு செய்து வருகிறேன். இது கலைஞர் அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/11&oldid=759576" இலிருந்து மீள்விக்கப்பட்டது