பக்கம்:என்னுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. எஸ்.எஸ். வாசன் lெ Tசன் என்ற பெயரைக் கேட்டதுமே, ஒளவையார் படம் எடுத்த சினிமா அதிபர் என்றுதான் பல பேருக்கு நினைவு வரும். ஆனால், பட அதிபர் வாசனையும் மீறி அவருக்குள்ளே இருந்த பத்திரிகை ஆசிரியர் வாசனை பல பேருக்குத் தெரிந்திருக்காது. அந்த மாமனிதரை 'குளோஸ் அப் பில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றவர்களில் நானும் ஒருவன். திரு.வாசன் தலைமையில் இயங்கிய ஆசிரியர் குழுவினருடன் இணைந்து ஆனந்த விகடனில் பணிபுரிந்தபோது பத்திரிகைத் தொழிலில் நான் படித்துக் கொண்ட பாடங்களும், நுட்பங்களும் அதிகம். திரு. வாசனின் கம்பீரமான , கண்ணியமான தோற்றத்துக்கு ஏற்ற மாதிரியே அவருடைய பேச்சும் செயலும் இருக்கும். பொருள் செறிந்த பேச்சு, எதையும் திர்க்கமாகச் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றல், எடிட்டிங் திறமை, நகைச்சுவை உணர்வு, மற்றவர்களின் திறமையைப் புரிந்து பாராட்டி, தட்டிக் கொடுக்கும் தாராள மனப்பான்மை, மலை புரண்டாலும் நிலை கலங்காத மனோதிடம் - இவ்வளவும் ஒருங்கிணைந்த ஒரு பர்ஸனாலிடிதான் வாசன். 1962-ல் பொதுத் தேர்தல் நடைபெற்ற சமயம் வாசன் அவர்கள் ஜெமினி ஸ்தாபன நிர்வாகப் பொறுப்பை ஒரு சட்டைபோல் கழற்றி வைத்துவிட்டு, ஆனந்த ア

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/13&oldid=759578" இலிருந்து மீள்விக்கப்பட்டது